ETV Bharat / sports

TNPL 2021: திண்டுக்கல்லை வாரி சுருட்டியது மதுரை - திண்டுக்கல் தோல்வி

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மதுரை
மதுரை
author img

By

Published : Jul 23, 2021, 1:06 AM IST

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஐந்தாவது சீசன் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 19) சென்னையில் தொடங்கியது. இந்நிலையில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணியும் நேற்று (ஜூலை 23) மோதின.

சுருண்டது திண்டுக்கல்

இப்போட்டியில், டாஸ் வென்ற மதுரை அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்பின்னர், களமிறங்கிய திண்டுக்கல் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களையே எடுத்தது.

திண்டுக்கல் அணியில் அதிகபட்சமாக மணி பாரதி 26 (23), ஹரி நிஷாந்த் 19 (24) ரன்களை எடுத்தனர். மதுரை அணியில் ராமலிங்கம் பாரதி, ஜெகதீசன் கௌசிக் ஆகியோர் 3 விக்கெட்டுகளையும், கிரண் ஆகாஷ், ரகுபதி சிலம்பரசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

எளிய இலக்கு

97 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய மதுரை அணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. ராஜ்குமார் 3, அனிருத் சீதா ராம் 4, அருண் கார்த்திக் 22, ஜெகதீசன் 31 ரன்களை அடித்து விக்கெட்டை இழந்தனர்.

இந்நிலையில், மதுரை அணி 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 97 ரன்களை எடுத்து, ஆறு விக்கெட்டுகள் வித்தியாசாத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தியது. இதில், சதுர்வேத் 18 ரன்களுடனும், ஷாஜகான் 11 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்றைய ஆட்டம்

இத்தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டத்தில், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் இன்று (ஜூலை 23) மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.