சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் நடைபெற்ற 28 லீக் போட்டிகளில் ரூபி திருச்சி வாரியர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் ப்ளோ-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
இதையடுத்து, ரூபி திருச்சி வாரியர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஆக. 15) நடைபெற்று வருகிறது.
ஜெகதீசன் 90
டாஸ் வென்ற திருச்சி அணி, சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு, கௌசிக் காந்தி, ஜெகதீசன் இணை சிறப்பான தொடக்கத்தை அளித்ததனர். கேப்டன் கௌசிக் காந்தி 26 ரன்களில் பொய்யாமொழி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, களமிறங்கிய ராதாகிருஷ்ணன் 3 ரன்களில் வெளியேறினார்.
-
🎯 184 for Ruby Trichy Warriors!
— TNPL (@TNPremierLeague) August 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
N Jagadeesan led the way with a terrific innings of 90 (58b,7x4,2x6), while Sonu Yadav & Harish Kumar contributed cameos towards the end.
Poiyamozhi & Rahil Shah bag 2 wickets for Warriors. #ShriramCapitalTNPL2021 #RTWvCSG #TNPLFinal pic.twitter.com/EkUlPNEjEV
">🎯 184 for Ruby Trichy Warriors!
— TNPL (@TNPremierLeague) August 15, 2021
N Jagadeesan led the way with a terrific innings of 90 (58b,7x4,2x6), while Sonu Yadav & Harish Kumar contributed cameos towards the end.
Poiyamozhi & Rahil Shah bag 2 wickets for Warriors. #ShriramCapitalTNPL2021 #RTWvCSG #TNPLFinal pic.twitter.com/EkUlPNEjEV🎯 184 for Ruby Trichy Warriors!
— TNPL (@TNPremierLeague) August 15, 2021
N Jagadeesan led the way with a terrific innings of 90 (58b,7x4,2x6), while Sonu Yadav & Harish Kumar contributed cameos towards the end.
Poiyamozhi & Rahil Shah bag 2 wickets for Warriors. #ShriramCapitalTNPL2021 #RTWvCSG #TNPLFinal pic.twitter.com/EkUlPNEjEV
மறுமுனையில், ஜெகதீசன் 37 பந்துகளில் அரை சதம் அடித்தார். இருப்பினும், அவருடன் இணைந்து வேறு யாரும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. சசிதேவ், ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, சதத்தை நெருங்கி வந்த ஜெகதீசன் 90 ரன்களில் பொய்யாமொழி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தொடக்கமே அதிரடி
இதன்மூலம், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை குவித்தது. திருச்சி தரப்பில் கேப்டன் ரஹில் ஷா, பொய்யாமொழி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, களமிறங்கியுள்ள திருச்சி அணி 15 ஓவர்களில் 119/6 என்ற நிலையில் தொடர்ந்து விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: LORDS TEST: இங்கிலாந்து தாக்குதலை சமாளித்த புஜாரா, ரஹானே இணை!