கொழும்பு (இலங்கை): இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 164 ரன்களைச் சேர்த்தது. அதில், அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 50, ஷிகார் தவான் 46 ரன்களை எடுத்தனர். இலங்கை தரப்பில் ஹசரங்கா, சமீரா ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர் விக்கெட்டுகள்
இதன்படி, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இலங்கை அணிக்கு, முதலில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழ ஆரம்பித்தது. மினோத் பானுகா 10(7) ரன்களுக்கும், டி சில்வா 9(10) ரன்களுக்கும், அவிஷ்கா 26(23) ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
-
#TeamIndia win the 1st #SLvIND T20I by 38 runs 💪
— BCCI (@BCCI) July 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
We go 1-0 in the series 🙌 pic.twitter.com/9FfFbx2TTZ
">#TeamIndia win the 1st #SLvIND T20I by 38 runs 💪
— BCCI (@BCCI) July 25, 2021
We go 1-0 in the series 🙌 pic.twitter.com/9FfFbx2TTZ#TeamIndia win the 1st #SLvIND T20I by 38 runs 💪
— BCCI (@BCCI) July 25, 2021
We go 1-0 in the series 🙌 pic.twitter.com/9FfFbx2TTZ
அசலங்கா அதிரடி
நான்காம் விக்கெட்டுக்கு பாண்டாராவுடன் ஜோடி சேர்ந்தார் அசலங்கா. பாண்டாரா பணிவாக விளையாட, அசலங்கா அதிரடி காட்ட ஆரம்பித்தார். 40 ரன்கள் சேர்த்த இந்த பாட்னர்ஷிப்பை ஹர்திக் பாண்டியா உடைத்தார். பாண்டாரா 9(19) ரன்களில் வெளியேற, அவரை தொடர்ந்து அசலாங்காவும் 44(26) ரன்களில் தனது விக்கெட்டை தீபக் சஹாரிடம் இழந்தார்.
அதன்பின் ஹசரங்கா ரன் ஏதும் இன்றியும், கருணாரத்ன 3(4) ரன்களிலும் முறையே தீபக் சஹார், புவனேஷ்வர் குமார் ஆகியோரிடம் போல்டாகி வெளியேறினர்.
கைவிட்ட கேப்டன்
இலங்கை அணியை கேப்டன் ஷனாகா கரையேற்றுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் வருண் சக்கரவர்த்தி சுழலில் வீழ்ந்து அணியை கைவிட்டுவிட்டார்.
அதன்பின்னர், இசுரு உடானா 1(2), சமீரா 1(3) ரன்னிலும் ஆட்டமிழக்க, இலங்கை அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களையே எடுத்தது.
ஆட்டநாயகன் புவி
-
4⃣/2⃣2⃣ in 3.3 overs 🔥🔥@BhuviOfficial wins the Man of the Match award for his splendid performance in the 1st #SLvIND T20I👏👏#TeamIndia pic.twitter.com/DlV3aIK4um
— BCCI (@BCCI) July 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">4⃣/2⃣2⃣ in 3.3 overs 🔥🔥@BhuviOfficial wins the Man of the Match award for his splendid performance in the 1st #SLvIND T20I👏👏#TeamIndia pic.twitter.com/DlV3aIK4um
— BCCI (@BCCI) July 25, 20214⃣/2⃣2⃣ in 3.3 overs 🔥🔥@BhuviOfficial wins the Man of the Match award for his splendid performance in the 1st #SLvIND T20I👏👏#TeamIndia pic.twitter.com/DlV3aIK4um
— BCCI (@BCCI) July 25, 2021
இதன்மூலம், இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி வரும் ஜீலை 27 (செவ்வாய்கிழமை) நடைபெற இருக்கிறது.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 4ஆவது நாள் அட்டவணை: பத்து போட்டிகளில் இந்திய வீரர்கள்