ETV Bharat / sports

ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் தொடர் : இந்திய அணியின் கேப்டன் யார்? சூர்யகுமார் யாதவ்? ருதுராஜ் கெய்க்வாட்?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் வழிநடத்துவார்கள் என தகவல் கூறப்படுகிறது.

T20I series
T20I series
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 9:30 PM IST

டெல்லி : உலக கோப்பை கிரிக்கெட் தொடரை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் களமிறங்க உள்ள இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் வழிநடத்துவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பாக கடந்த செப்டம்பர் மாதம் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நவம்பர் 23ஆம் தேதி தொடங்குகிறது.

வரும் நவம்பர் 15ஆம் தேதி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரை இறுதி ஆட்டம் நடைபெற உள்ள நிலையில், அதன்பின் ஆஸ்திரேலிய டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடது காணுக்கால் பகுதியில் தசைநார் கிழிந்த காயத்திற்கு சிகிச்சை பெற்று வரும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பூரண குணம் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரில் ஒருவர் வழிநடத்துவார்கள் என தகவல் கூறப்படுகிறது. டிசம்பர் 10ஆம் தேதி தென் ஆப்பிரிக்க அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியை வழிநடத்த ஏதுவாக, நவம்பரில் வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதனால் வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் துணை கேப்டன் சூர்யகுமார் ஜாதவ் அல்லது ஆசிய சாம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரில் தங்கம் வென்ற இந்தியை அணியை வழிநடத்திய ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரில் ஒருவரிடம் கேப்டன்சியை ஒப்படைக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா, மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்திய வீரர்களுக்கு சிறப்பான பயிற்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் அணியில் இணைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், யுஸ்வேந்திர சஹல் ஆகியோருக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் அக்சர் படேல் பூரண குணமடைந்து அணிக்கு திரும்பும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்க தொடரை கருத்தில் கொண்டு ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : New Zealand vs Sri Lanka : நியூசிலாந்து அபார வெற்றி! அரைஇறுதிக்கு தகுதி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.