கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டி நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (பிப்.24) தொடங்கியது. இங்கிலாந்து அணி உடன் தென் ஆப்பிரிக்க அணி மோதி வருகிறது. முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் சுனே லூஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் களமிறங்கி உள்ளனர். 6.1 ஓவர்கள் முடிவில் 37 ரன்களை குவித்துள்ளனர். இந்த போட்டியில் வெற்றிபெரும் அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி உடன் மோதும். இரு அணிகளின் வீராங்கனைகள் விவரம் பின்வருமாறு.
இங்கிலாந்து அணி: ஹீதர் நைட் (கேப்டன்) டேனியல் வியாட், சோபியா டன்க்லி, ஆலிஸ் கேப்ஸி, நாட் ஸ்கிவர்-ப்ரன்ட், ஆமி ஜோன்ஸ் (கீப்பர்), சோஃபி எக்லெஸ்டோன், கேத்ரின் ஸ்கிவர்-பிரண்ட், சார்லோட் டீன், சாரா க்ளென் மற்றும் லாரன் பெல்.
தென் ஆப்பிரிக்கா அணி: சுனே லூஸ்(கேப்டன்), லாரா வோல்வார்ட், டாஸ்மின் பிரிட்ஸ், மரிசான் கேப், சோலி ட்ரையோன், நாடின் டி க்ளெர்க், அன்னேக் போஷ், சினாலோ ஜஃப்தா(கீப்பர்), ஷப்னிம் இஸ்மாயில், அயபோங்க காக்கா மற்றும் நோன்குலுலேகோ ம்லபா.
முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியா அணி உடன் மோதியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தோனி, ஹர்மன்பிரீத் கவுர் ரன் அவுட்டால் இந்தியாவுக்கு நடந்த கொடுமை! ரசிகர்கள் விமர்சனம்