ETV Bharat / sports

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி-20 தொடரில் சஞ்சு சாம்ஸன் சேர்ப்பு! - men in blue

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி-20 தொடரில் , கே.எல்.ராகுலுக்கு பதிலாக இந்திய அணியில் சஞ்சு சாம்ஸன் சேர்க்கப்பட்டுள்ளார்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி-20 தொடரில் சஞ்சு சாம்ஸன் சேர்ப்பு

author img

By

Published : Jul 29, 2022, 7:50 PM IST

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி-20 தொடரில் சஞ்சு சாம்ஸன் சேர்க்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் 5 டி -20 போட்டிகளில் விளையாடுகிறது

தவான் தலைமையிலான ஒரு நாள் அணி தொடரை முழுமையாக கைப்பற்றிய நிலையில் , இன்று முதல் டி 20 போட்டி நடைபெறுகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்த அணியில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்ஸன் கே.எல்.ராகுலுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார்.

கே.எல்.ராகுலுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு , தற்போது ஓய்வில் இருப்பதால் அவருக்கு பதிலாக அணியில் சஞ்சு சாம்ஸனை பிசிசிஐ சேர்த்துள்ளது. சஞ்சு சாம்ஸன் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது போட்டியில் அரை சதம் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "சென்னைக்கு வருவதே இதற்குதான்"... செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் 8 வயது சிறுமி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.