இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா, தனது சாதனைப் புத்தகத்தில் புதிய சாதனை ஒன்றை இன்று பதித்துள்ளார்.
டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து விதமான போட்டிகளிலும் சர்வதேச அளவில் ஜொலிப்பவர், ரோஹித் சர்மா. பல போட்டிகளில், நிலைத்து நின்று ஆடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.
15 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்து சாதனை
தற்போது, இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி விளையாடி வருகிறது. மூன்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 4ஆவது டெஸ்ட் போட்டி, ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று தனது ஆட்டத்தைத் தொடங்கிய ரோஹித், சர்வதேசப் போட்டிகளில் 15 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.
8ஆவது இந்திய வீரர்
15 ஆயிரம் ரன்களைக் கடந்த 8ஆவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்தச் சாதனையின் மூலம் சச்சின், டிராவிட், கோலி, கங்குலி, தோனி, சேவாக், அசாருதீன் பட்டியலில் ரோஹித்தும் இடம்பிடித்துள்ளார்.
கோலி தான் முதலிடம்
இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி, குறைவான இன்னிங்ஸ்களில் 15 ஆயிரம் ரன்களைக் கடந்து பட்டியலில் முதலிடம் பிடித்தார். அவர் அந்த ரன்களை 333 இன்னிங்ஸில் பெற்றார்.
தற்போது, ரோஹித் 396 இன்னிங்ஸ்களில் 15 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குத்துச்சண்டை வீராங்கனை போட்டியின்போது மயங்கி விழுந்து உயிரிழப்பு