ETV Bharat / sports

உலகக்கோப்பைக்காக கம்மின்ஸுக்கு ஓய்வளித்த ஆஸ்திரேலியா!

author img

By

Published : Mar 29, 2019, 4:24 PM IST

உலகக்கோப்பையை மனதில் வைத்து, பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஆஸ்திரேலிய வீரர் பட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

பட் கம்மின்ஸ்

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் முதல் மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலிய வென்று 3-0 எனதொடரை வென்றுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸுக்கு ஆஸ்திரேலியா அணி ஓய்வளித்துள்ளது.

ஆஸ்திரேலிய வீரர் பட் கம்மின்ஸ் மூன்றாவது ஒருநாள் போட்டியில் மட்டுமே பங்கேற்று விளையாடினார். அதில் மூன்று முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஆஸ்திரேலிய அணி 3-0 தொடரைக் கைப்பற்றியதையடுத்து, அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக்கோப்பையை மனதில் வைத்து வேகப்பந்துவீச்சாளர் பட் கம்மிஸுக்கு ஓய்வளித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட்சன் காயம் காரணமாக பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகினார். தற்போது கம்மின்சுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா நாதன் கவுல்நைல் மற்றும் கேன் ரிச்சர்ட்சனுடன் களமிறங்குவார்கள்என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.