ETV Bharat / sports

"இந்தியாவை வீழ்த்துவது அவ்வளவு எளிது அல்ல" - மிட்செல் சான்ட்னர்!

World Cup 2023 : தர்மசாலாவில் இந்திய அணியை வீழ்த்துவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல என்றும் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருப்பதால் அவரது விக்கெட் முக்கியமானதாக இருக்கும் என்றும் நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் தெரிவித்தார்.

Mitchel Santner
Mitchel Santner
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 1:36 PM IST

சென்னை : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வெல்வது அவ்வளவு எளிதல்ல என்றும் கடுமையான சவாலாக இந்திய அணி இருக்கும் என நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் தெரிவித்து உள்ளார்.

13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் நியூசிலாந்து அணி தான் விளையாடிய மூன்று லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்து உள்ளது.

அகமதாபாத், ஐதராபாத், சென்னை என மூன்று மைதானங்களில் விளையாடி உள்ள நியூசிலாந்து அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இந்திய அணியை வரும் 21ஆம் தேதி தர்மசாலாவில் எதிர்கொள்கிறது. தர்மசாலாவில் நிலவும் சூழலுக்கு ஏற்ப விளையாடி இந்திய அணியை வெல்வது என்பது நியூசிலாந்து அணிக்கு சாதாரண விஷயம் அல்ல.

நடப்பு தொடரில் இந்திய அணியை எதிர்கொள்வது என்பது எளிதானது அல்ல என நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் தெரிவித்து உள்ளார். வரும் 21ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட நியூசிலாந்து வீரர்கள் தர்மசாலா பயணம் மேற்கொண்டு உள்ளனர். இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் ரோகித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருப்பதாகவும், அவரது விக்கெட் நியூசிலாந்துக்கு பெரும் திருப்புமுனையாக அமையும் என்றும் சான்ட்னர் தெரிவித்து உள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடியதன் மூலம் இந்திய மைதானங்களின் தன்மை குறித்து நன்கு அறிந்து இருப்பதால் பந்துவீச உதவியாக இருக்கும் என மிட்செல் சான்ட்னர் தெரிவித்து உள்ளார். பவர் பிளே ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடிய வகையில் உள்ளதால் அதில் கவனம் செலுத்தி அதுமுதலே விக்கெட் வீழ்த்துவது தான் சரியானது என மிட்செல் சான்ட்னர் தெரிவித்தார்.

ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடிய சான்ட்னர் மற்றும் டிவென் கான்வாய்க்கு கடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் சொந்த மைதானத்தில் விளையாடியது போன்றே அமைந்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரானை மிட்செல் சான்ட்னர் வீழ்த்தியதன் மூலம் அவரது மொத்த விக்கெட் எண்ணிக்கை நூறாக உயர்ந்தது.

இதன் மூலம் முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரிக்கு அடுத்த படியாக 100 விக்கெட்டுகளை கடந்த இரண்டாவது நியூசிலாந்து வீரர் என்ற சிறப்புக்கு மிட்செல் சான்ட்னர் சொந்தக்காரர் ஆனார்.

இதையும் படிங்க : இந்தியா - வங்கதேசம் ஆட்டத்துல இவ்வளவு விஷயம் இருக்கா? நீங்கள் தெரிஞ்சிக்க வேண்டியவை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.