சென்னை: சுழற்பந்து ஜாம்பவான் என்றழைக்கப்படும் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் உடல்நல குறைவு காரணமாக ஏப்ரல் 18ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்களின் பரிசோதனை அடிப்படையில் இருதய ரத்த நாளத்தில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. வெற்றிகரமான ஆஞ்சியோ சிகிச்சை மூலம் தற்போது உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளதால், அவர் நேற்றி வீடு திரும்பினார்.
49 வயதான முரளிதரன் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சுழற்பந்து ஆலோசகராக உள்ளார்.
இதையும் படிங்க: IPL 2021 CSK vs RR: தொடரில் 2ஆவது வெற்றியைப் பெறப்போவது யார்?