கொழும்பு: இன்று இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது உலகில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே உச்சரிக்கும் பெயர் சிராஜ்.. சிராஜ். ஏனென்றால், பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில், இலங்கை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் முதல் தொடங்கி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வரை அனைவரையும் ஒரே ஒவரில் மொத்தமாக ஆட்டமிழக்கச் செய்து பெவிலியன் திரும்பச் செய்தார், இந்திய வீரர் முகமது சிராஜ்.
-
W 0 W W 4 W
— ICC (@ICC) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
What a crazy over by Mohammed Siraj 🤯
India are on top in the #AsiaCup2023 Final!
📝: https://t.co/iP9YDGKRjo pic.twitter.com/PiOcgjNjFN
">W 0 W W 4 W
— ICC (@ICC) September 17, 2023
What a crazy over by Mohammed Siraj 🤯
India are on top in the #AsiaCup2023 Final!
📝: https://t.co/iP9YDGKRjo pic.twitter.com/PiOcgjNjFNW 0 W W 4 W
— ICC (@ICC) September 17, 2023
What a crazy over by Mohammed Siraj 🤯
India are on top in the #AsiaCup2023 Final!
📝: https://t.co/iP9YDGKRjo pic.twitter.com/PiOcgjNjFN
ஆட்டத்தின் முதல் ஓவரே அற்புதமாக பந்து வீசி, அந்த ஓவரை மெய்டன் ஆக்கினார். அதனையடுத்து தனது இரண்டாவது 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியை களங்கடிக்கச் செய்தார். இப்படி ஒரு இலங்கை அணியின் சரிவை எவருமே எதிர்பார்க்கவில்லை. ஏன், இந்திய அணியின் வீரர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இப்படி அவர் வீசிய ஓவர்கள் எல்லாம் விக்கெட்டுகள் மழை பொழிந்து கொண்டே இருந்தது. இலங்கை வீரர்கள் யாராவது இவரின் பந்து வீச்சை சமாளித்து ரன்கள் சேர்ப்பார் என இலங்கை ரசிகர்கள் நம்பிக்கையை தகர்த்து எறிந்தார், முகமது சிராஜ். இதனால் பல சாதனைகளை தன் வசம் ஆக்கினார், சிராஜ்.
முதல் முறையாக ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை சிராஜ் படைத்துள்ளார். அதேபோல் குறைந்த பந்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சமிந்த வாஸுடன் இணைந்துள்ளார்.
சமிந்த வாஸ் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரைப் போலவே முகமது சிராஜும் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மேலும், இந்த சாதனையை படைத்த முதல் இந்தியர் முகமது சிராஜ்தான். அதேநேரம், முகமது சிராஜின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இது ஒரு சிறந்த பந்து வீச்சாக அமைந்துள்ளது.
இது குறித்து சிராஜ் கூறுகையில், “இதனை ஒரு கனவுபோல் உணர்கிறேன். கடைசியாக நான் திருவனந்தபுரத்தில் இலங்கைக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். நான் எப்போதுமே ஒயிட் பால் கிரிக்கெட்டில் ஸ்விங்கை எதிர்பார்ப்பேன். முந்தைய ஆட்டங்களில் அது கிடைக்கவில்லை. இன்று பால் நன்றாக ஸ்விங்கானது. மேலும், அவுட் ஸ்விங்கால் நான் அதிக விக்கெட்டுகளை பெற்றேன்” என்றார்.
இதையும் படிங்க: Asia Cup Final 2023: 8வது முறையாக சாம்பியனான இந்திய அணி!