ஜூலை 1ஆம் தேதி இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி - லீசெஸ்டர்ஷைர் ஃபாக்ஸஸ் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இதில் 3ம் நாள் ஆட்டத்தின் போது கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கவில்லை...
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால் , களமிறங்கவில்லை என கூறப்பட்டது. போட்டிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் , ரோகித் சர்மா குணமடைவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் சுப்மன் கில்லுடன் தொடக்க வீரராக யாரைக் களமிறக்கலாம் என அணி யோசித்து வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விமானத்தில் பர்மிங்காம் புறப்பட்டு சென்றுள்ளார். மயங்க் அகர்வால் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,488 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மயங்க் அகர்வால் கடந்த மார்ச் மாதம் ஸ்ரீ லங்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார்.