டெல்லி: ஆசியக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 70 சதங்களை அடித்த கோலி 71ஆவது சதத்தை அடிக்க முடியாமல் 3 ஆண்டுகளாக திணறினார். இதனால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையிலேயே ஆசிய கோப்பை தொடரில் சதம் அடித்து தன்னை மீண்டும் நிரூப்பித்துக்கொண்டார்.
அவருக்கு பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பராட்டு தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது பாராட்டை தெரிவித்தார். இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில், "ஒரு கிரிக்கெட் வீரராக விராட் கோலி என்னை விட அதிக திறமையானவர்". இருவரும் கேப்டன்களாக கிரிக்கெட்டில் விளையாடி உள்ளோம். என்னை பொறுத்தவரை கேப்டன்ஷிப்பை வைத்து யாரையும் ஒப்பீடு செய்யக்கூடாது. திறமையை வைத்து மட்டும் ஒப்பீடு செய்ய வேண்டும்.
"நாங்கள் வெவ்வேறு தலைமுறைகளில் விளையாடினோம். அவர் தொடர்ந்து விளையாடுவார். அநேகமாக என்னை விட அதிகமாக விளையாடுவார். கோவிட் ஊரடங்கிற்கு பின் கிரிக்கெட் பரபரப்பாகவும், பிஸியாகவும் மாறிவிட்டது. "நான் கிரிக்கெட் விளையாடி போது மன அழுத்தம் குறைவாக இருந்தது. விமர்சனங்கள் செய்திதாளிலும் நேரடியாகவும் மட்டுமே இருந்தது. இப்போது அப்படியல்ல. அனைவரும் விமர்சனம் செய்கிறார்கள். இளைஞர்கள் அதை ஒரு வாய்ப்பாக பார்த்து தங்களை மெருகேற்றிக்கொள்ள வேண்டும். முன்னேற வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆரோன் பின்ச் ஓய்வு