ETV Bharat / sports

கோலி விளையாடும் வரை டெஸ்ட் போட்டி இருக்கும் - ஷேன் வார்னே

author img

By

Published : Sep 8, 2021, 7:38 PM IST

விராட் கோலி டெஸ்ட் போட்டியில் தனித்த அணுகுமுறையை வெளிப்படுத்துகிறார், அதனால் அவர் விளையாடும் வரை டெஸ்ட் போட்டி நிலைத்திருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

ஷேன் வார்னே, விராட் கோலி
ஷேன் வார்னே

லண்டன்: இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதலாவது போட்டி வெற்றி, தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணியும், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றன.

இதையடுத்து, நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

கோலியின் முன்னெடுப்புகள்

மேலும், SENA நாடுகள் (South africa, England, New zealand, Australia) என்னும் அந்நிய நாடுகளில் கோலியின் தலைமையில் பல வெற்றிகளைக் குவித்துவருகிறது. 2020-21 ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை ரஹானே தலைமையில் கைப்பற்றி இருந்தாலும், விராட் கோலியின் பங்கு அளப்பரியது. இந்தியாவில் வேகப்பந்துவீச்சு முன்னெப்போதும் இல்லாத அளவு தற்போது மிகவும் வலுப்பெற்றுள்ளது.

இந்நிலையில், விராட் கோலியின் கேப்டன்சியை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், உலகத்தர சுழற்பந்துவீச்சாளருமான ஷேன் வார்னே புகழ்ந்துள்ளார்.

கூட்டு விளையாட்டு மிக முக்கியம்

அவர் கூறியதாவது, "இந்திய அணியினர் விராட் கோலியைப் பின்பற்றுகின்றனர். அவர் மீது வீரர்கள் அனைவரும் மரியாதையை வைத்துள்ளனர். அதனால்தான், அவர்கள் அவரின் வழியைப் பின்பற்றி விளையாடுகின்றனர்.

அணி ஒரு கேப்டனுக்கு உறுதுணையாக இருப்பதும், அவரின் மீது நம்பிக்கையோடு இருப்பதும் ஒரு கூட்டு விளையாட்டுக்கு மிக முக்கியமானது. அந்த வகையில், நாம் விராட் கோலிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

விராட் கோலி அவருடைய அணிக்குப் பெரும் நம்பிக்கை கொடுத்துள்ளார். விராட் கோலி இருக்கும் வரை டெஸ்ட் கிரிக்கெட் நிலைத்திருக்கும் என்பதை உறுதியாகக் கூறலாம்" என்றார்.

இதையும் படிங்க: ICC Test Rankings: 5ஆவது இடத்தில் நீடிக்கும் ஹிட்-மேன்; பும்ரா முன்னேற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.