ETV Bharat / sports

காயத்தால் விலகிய ராகுல் - கேப்டனாகும் ரிஷப் பந்த் - Kuldeep Yadav

தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கே.எல். ராகுல் தென்னாப்பிரிக்காவுடனான டி20 தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

IND vs SA
IND vs SA
author img

By

Published : Jun 8, 2022, 11:09 PM IST

மும்பை: 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடுவதற்காக இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்கா அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தொடரின் முதல் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை (ஜூன் 9) இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இத்தொடரில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டார்.

மேலும், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்கள் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா ஆகியோரும் அணியில் இணைந்துள்ளனர். போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், பயிற்சியின்போது தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுடனான டி20 தொடரில் இருந்து விலகுவதாக கேப்டன் கே.எல். ராகுல் இன்று (ஜுன் 8) அறிவித்தார்.

இந்நிலையில், அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் - பேட்டர், ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஹர்திக் செயல்படுவார். தொடர்ந்து, இடதுகை சைனாமேன் சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் யாதவும் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். நேற்றைய (ஜூன் 7) பேட்டிங் பயிற்சியின்போது, வலது கையில் அடிபட்டதில் அவர் காயமுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கே.எல். ராகுல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை தலைமை தாங்கினார். மேலும், 15 போட்டிகளில் விளையாடி 616 ரன்களை குவித்து, அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாமிடத்தை பிடித்தார். கே.எல். ராகுல் விலகியுள்ளதால், ஓப்பனிங்கில் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே ஐபிஎல் தொடரில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடிய குல்தீப் யாதவ் 21 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இதுவே, ஒரு ஐபிஎல் தொடரில் அவர் பெற்ற அதிகபட்ச விக்கெட்டுகளாகும். இந்த இருவரும் தற்போது காயத்தால் தொடரில் இருந்து விலகிய நிலையில், ஒரு ஓப்பனிங் பேட்டர், சுழற்பந்துவீச்சாளர் ஆகிய இடங்கள் காலியாகியுள்ளது. இவர்களுக்கான மாற்று வீரர்கள் யாரும் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கவை.

இதையும் படிங்க: ஓய்வை அறிவித்தார் மிதாலி ராஜ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.