ETV Bharat / sports

Ind Vs Aus : பவர் பிளேயில் மோசமான சாதனை! பும்ராவின் மோசமான இன்னிங்ஸ்! - இந்தியா ஆஸ்திரேலியா உலக கோப்பை கிரிக்கெட் 2023

World Cup final 2023: பவர் பிளேயில் அதிக ரன்களை வாரி வழங்கி இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

Jasprit Bumrah
Jasprit Bumrah
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2023, 9:42 PM IST

அகமதாபாத் : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் மற்றும் அரைஇறுதி ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் கிளைமாக்ஸ் காட்சியான இறுதி போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற அஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது. இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் ரோகித் சர்மா 47 ரன்னும், விராட் கோலி 54 ரன்னும், கே.எல்.ராகுல் 66 ரன்னும் எடுத்தனர்.

தொடர்ந்து 241 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தனது முதல் ஓவரை வீசிய ஜஸ்பிரீத் பும்ரா, அதில் 15 ரன்களை வழங்கினார். முதலாவது பவர் பிளேயில் பும்ரா வழங்கிய அதிகபட்ச ரன் இது என்பது குறிப்பிடத்தக்கது. பும்ராவின் அந்த ஓவரை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் 3 பவுண்டரிகளை பறக்க விட்டனர்.

கட்டுக்கோப்பாக பந்துவீசக் கூடிய பும்ரா, முதல் முறையாக முதல் பவர்பிளேயில் 10 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்து மோசமான சாதனையை படைத்து உள்ளார்.

இதையும் படிங்க : India Vs Australia : ஆஸ்திரேலிய அணி சாம்பியன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.