ETV Bharat / sports

EXCLUSIVE: மகளிர் ஐபிஎல் சாத்தியமில்லை... பிசிசிஐ மூத்த அதிகாரி...

மகளிர் கிரிக்கெட் போட்டிகள் சர்வதேச தரத்திலான வீராங்கணைகளை உருவாக்கவில்லை. தரமான வீராங்கணைகள் பற்றாக்குறை உள்ளதால், அடுத்தாண்டு மகளிர் ஐபிஎல் தொடங்குவது சாத்தியமற்றது, பிசிசிஐ மூத்த அதிகாரியின் கருத்து.

womens-ipl-from-2023-looks-uncertain
womens-ipl-from-2023-looks-uncertain
author img

By

Published : Apr 12, 2022, 7:39 PM IST

கொல்கத்தா: இந்தியாவில் 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடந்துவருகின்றன. மொத்தம் 8 அணிகள் இருந்த நிலையில், இந்தாண்டு 2 அணிகள் சேர்ந்துள்ளன. ஏனென்றால், இந்தப் போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனால், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, வங்க தேச நாடுகளும் டி20 லீக்குகளை நடத்த தொடங்கின. குறிப்பாக, ஆஸ்திரேலியா மகளிர் பிக் பாஷ் லீக் (WBBL) எனப்படும் மகளிருக்கு டி20 லீக்குகளை நடத்த ஆரம்பித்தது.

மகளிர் ஐபிஎல்: இந்தியாவில் மகளிருக்கான ஐபிஎல் லீக் போட்டிகளை நடத்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துவந்தன. இதனிடையே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி, அடுத்தாண்டு முதல் மகளிருக்கான ஐபிஎல் போட்டி நடத்த வாய்ப்புள்ளது.

முதல்கட்டமாக, 6 அணிகள் கலந்துகொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுவருகிறது. அந்த வகையில் பிளே-ஆஃப் சுற்றில் 3 அணிகள் பங்கேற்று, இறுதி போட்டிக்கு முன்னேறும் என்று தெரிவித்திருந்தார்.

தரமான வீரர்கள் பற்றாக்குறை: இந்த நிலையில், பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "அடுத்தாண்டு மகளிருக்கு ஐபிஎல் போட்டிகள் தொடங்குவது சாத்தியமில்லை. நாட்டில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதில் பிசிசிஐ தொடர்ந்து செயல்படும். ஆனால், மகளிர் கிரிக்கெட்டில் தரமான வீரர்களின் பற்றாக்குறை உள்ளது.

இந்த நேரத்தில், மகளிர் ஐபிஎல் சாத்தியமற்றது. மகளிர் ஐபிஎல் லீக்கிற்கு குறைந்தபட்சம் 4 முதல் 5 அணிகள் தேவை. இந்த எண்ணிக்கையிலான அணிகளை நம்மிடம் இருக்கும் குறைந்தபட்ச திறமையான வீராங்கணைகளை வைத்து உருவாக்க முடியாது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச தரத்தில் உருவாகியது போல், இந்திய கிரிக்கெட் வீராங்கணைகள் இன்னும் உருவாக்கவில்லை. குறிப்பாக, மகளிர் கிரிக்கெட் போட்டிகள் சர்வதேச தரத்திலான வீராங்கணைகளை உருவாக்கவில்லை என்று சொல்லாம்.

அதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும். உதாரணத்திற்கு, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் வீராங்கணை ஜூலன் கோஸ்வாமி போல் பலர் தேவைப்படுகிறார்கள். ஆனால், இல்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2022: முதல் வெற்றியை ருசிக்குமா சென்னை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.