ETV Bharat / sports

கேப்டனாக கடைசி தொடர் - விராட் கோலி அறிவிப்பு

நடப்பு ஐபிஎல் தொடருக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

விராட் கோலி
விராட் கோலி
author img

By

Published : Sep 20, 2021, 3:04 AM IST

ஐபிஎல் தொடரின் சிறந்த அணிகளுள்‌ ஒன்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி. ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டரி என தொடக்கத்தில் உலகத்தர வீரர்களின் தலைமையில் ஆர்சிபி‌ 2009, 2011ஆம் ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது.

அதன்பின்னர், 2013ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அந்த அணிக்கு கேப்டனாக விராட் கோலி பொறுப்பு வகித்து வருகிறார்.

கேப்டனாக கடைசி தொடர்

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடருக்கு பிறகு ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியதாவது, " இந்த ஐபிஎல் தொடர்தான் ஆர்சிபிக்கு கேப்டனாக விளையாடும் கடைசி தொடர். ஒன்பது ஆண்டுகள் ஆர்சிபியின் கேப்டனாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அணி நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்திய பிறகு இந்த முடிவை எடுத்துள்ளேன்.

ஆனால், வேறு அணியில் விளையாடுவதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. எனவே, ஐபிஎல் தொடரில் எனது கடைசி போட்டி வரை பெங்களூரு அணியில் மட்டுமே விளையாடுவேன் என்பதை உறுதியாக கூறுவேன்.

இதுவரை இந்த பயணத்தின் வெற்றி, தோல்வி என அனைத்திலும் உடனிருந்த ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

கோலியின் கேப்டன்சியில் ஆர்சிபி மூன்று முறை ப்ளே ஆஃப் சுற்றில் முன்னேறியிருக்கிறது. அதில், 2016ஆம் ஆண்டில்‌ மட்டுமே ஆர்சிபி இறுதிப்போட்டிக்குச் சென்றது.

கப்‌ நமதே...

முன்னதாக, டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி20 போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

14ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாம் கட்டப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று (செப்.19) தொடங்கிய நிலையில், இன்று (செப்.20) 31ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உடன்‌ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது.

தற்போது புள்ளிப்பட்டியலில், ஆர்சிபி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: CSK vs MI: ரூதுராஜின் ருத்ரதாண்டவத்தால் தப்பித்தது சிஎஸ்கே

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.