மும்பை: ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் மகாரஷ்டிராவில் நடந்துவருகிறது. இதுவரை 30 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி 6 போட்டிகளில் 5 வெற்றிகள், ஒரு தோல்வி என்ற கணக்கில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்த சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணி 6 போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியடைந்து 10ஆவது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் ஐந்து தோல்விகள், ஒரு வெற்றி என்ற கணக்கில் 9ஆவது இடத்தில் உள்ளது.
இதனால் இரண்டு அணிகளின் ரசிகர்களும் மிகுந்த கவலையில் உள்ளனர். இன்றைய ஆட்டத்தில் 3ஆவது இடத்தில் உள்ள லக்னோ அணியும், 4ஆவது இடத்தில் உள்ள பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறும்.
ஐபிஎல் 2022 அணிகள் | லீக் ஆட்டங்கள் | வெற்றி | தோல்வி | ரன் ரேட் | புள்ளிகள் | இடம் |
குஜராத் டைட்டன்ஸ் | 6 | 5 | 1 | +0.395 | 10 | 1 |
ராஜஸ்தான் ராயல்ஸ் | 6 | 4 | 2 | +0.380 | 8 | 2 |
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 6 | 4 | 2 | +0.296 | 8 | 3 |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | 6 | 4 | 2 | +0.142 | 8 | 4 |
சன்ரைசஸ் ஹைதராபாத் | 6 | 4 | 2 | +0.077 | 8 | 5 |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 7 | 3 | 4 | +0.160 | 6 | 6 |
பஞ்சாப் கிங்ஸ் | 6 | 3 | 3 | +0.109 | 6 | 7 |
டெல்லி கேப்பிட்டல்ஸ் | 5 | 2 | 3 | +0.219 | 4 | 8 |
சென்னை சூப்பர் கிங்ஸ் | 6 | 1 | 5 | -0.638 | 2 | 9 |
மும்பை இந்தியன்ஸ் | 6 | 0 | 6 | -1.048 | 0 | 10 |
இதையும் படிங்க: IPL 2022: 2ஆவது இடத்திற்கான போட்டி... எல்எஸ்ஜி vs ஆர்சிபி...