டெல்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ஹைதராபாத் அணியின் சார்பில் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் களாமிறங்கினர். இந்த ஜோடியில் பேர்ஸ்டோவ் 7 (5) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து வார்னருடன், மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார்.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, மெதுவாக ரன்களை சேர்த்தது. இந்த ஜோடியில் மணிஷ் பாண்டே 35 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அவரைத்தொடர்ந்து டேவிட் வார்னரும் 50 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்த நிலையில், 57 (55) ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக மணிஷ் பாண்டேவும் 61(46) ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், அதிரடி காட்டிய கேன் வில்லியம்சன் 26(10) ரன்களும், கேதர் ஜாதவ் 12 (4) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக நிகிடி 2 விக்கெட்டுகளும், சாம் கரண் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.