நடப்பு ஐபிஎல் போட்டியின் 23ஆவது ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மும்பை வான்கடேயில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது. மந்தமான சென்னை ஆடுகளத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் டெல்லியில் முதன்முதலாக சந்திக்க உள்ளன.
பேட்டிங்கிற்கு சாதகமான வான்கடே ஆடுகளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக பந்து வீசியது. கடைசியாக ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில், பேட்டிங்கில் சற்று திணறினாலும், ஜடேஜாவின் அசத்தலான ஆல்ரவுண்டிங் பர்பாமன்ஸால் சென்னை அணி வெற்றிபெற்றது.
-
Both teams have made changes to their XI.@ChennaiIPL: Lungi Ngidi, Moeen Ali back. Dwayne Bravo, Imran Tahir miss out.@SunRisers: Manish Pandey, Sandeep Sharma back. Abhishek Sharma , Virat Singh miss outhttps://t.co/dvbR7X1Kzc #VIVOIPL #CSKvSRH pic.twitter.com/kqKjtygLoi
— IndianPremierLeague (@IPL) April 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Both teams have made changes to their XI.@ChennaiIPL: Lungi Ngidi, Moeen Ali back. Dwayne Bravo, Imran Tahir miss out.@SunRisers: Manish Pandey, Sandeep Sharma back. Abhishek Sharma , Virat Singh miss outhttps://t.co/dvbR7X1Kzc #VIVOIPL #CSKvSRH pic.twitter.com/kqKjtygLoi
— IndianPremierLeague (@IPL) April 28, 2021Both teams have made changes to their XI.@ChennaiIPL: Lungi Ngidi, Moeen Ali back. Dwayne Bravo, Imran Tahir miss out.@SunRisers: Manish Pandey, Sandeep Sharma back. Abhishek Sharma , Virat Singh miss outhttps://t.co/dvbR7X1Kzc #VIVOIPL #CSKvSRH pic.twitter.com/kqKjtygLoi
— IndianPremierLeague (@IPL) April 28, 2021
சென்னையை பொறுத்தவரை ருதுராஜ் கெய்க்வாட், டூப்ளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு ஆகியோர் நல்ல பார்மில் இருப்பது பலம். பவுலிங்கை பொறுத்தவரை தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர் அருமையாக பந்து வீசுகின்றனர்.
ஹைதராபாத் அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் வார்னர், பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சனையும் பெரிதும் நம்பி இருக்கிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலுமே ஹைதராபாத் அணி வெளிநாட்டு வீரா்களையே நம்பியிருக்கிறது. மிக முக்கியமாக பவுலிங்கில் புவனேஷ்வர் ரஷீத் கானையே மலையென நம்பியிருக்கிறது.
சிஎஸ்கே பிளேயிங் லெவன்: எம்.எஸ்.தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஃபாப் டூ பிளேசிஸ், சாம் கரன், ருத்ராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், லுங்கி இங்கிடி.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்: டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ரஷீத் கான், ஜெகதீஷா சுசித், சித்தார்த் கவுல், கலீல் அகமது, சந்தீப் சர்மா.