ETV Bharat / sports

SRH vs KKR: ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை.. பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா கொல்கத்தா?

author img

By

Published : May 4, 2023, 2:25 PM IST

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமமான புள்ளிகளை பெற்றுள்ள நிலையில் அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறப்போவது யார்? வெற்றி பெற இரு அணிகளும் வகுத்துள்ள வியூகங்கள் என்ன? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

Today IPL
இன்றைய ஐபிஎல்

ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. நடப்பு சீசனில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளிகளை பெற்று, 8வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்க, இனி வரும் அனைத்து போட்டிகளிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற வேண்டும். அப்போது தான் அந்த அணி 16 புள்ளிகளை பெற முடியும்.

ஜேசன் ராய்க்கு வாய்ப்பு: இன்றைய போட்டியில் வெற்றி பெற கொல்கத்தா அணி சில வியூகங்களை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் ஜெகதீசன் மற்றும் குர்பாஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். அந்த போட்டியில் குர்பாஸ் அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 81 ரன்களை குவித்தார். ஆனாலும் ஷர்துல் தாகூர், ஜெகதீசன் ஆகியோர் ஏமாற்றினர். எனவே கடந்த போட்டியில் பங்கேற்காத அதிரடி வீரர் ஜேசன் ராய், இன்றைய போட்டியில் களம் இறங்க வாய்ப்புள்ளது. லிட்டன் தாசுக்கு பதிலாக மேற்கிந்திய தீவுகள் வீரர் ஜான்சன் சார்லஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Sunrisers vs Night riders
சன்ரைசர்ஸ் vs நைட் ரைடர்ஸ்

மிடில் ஆர்டரில் வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங் ஆகியோர் நிலைத்து நின்றால் மட்டுமே ரன் குவிக்க முடியும். ரசல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சல் நம்பிக்கை அளிக்கிறார். சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி தருகிறார். காயம் காரணமாக இன்றைய போட்டியில், உமேஷ் யாதவ் பங்கேற்க வாய்ப்பில்லை.

மிடில் ஆர்டர் பலவீனம்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை 8 போட்டிகளில் விளையாடி, 3 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகளை பெற்று 9வது இடத்தில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் களம் இறங்க உள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசிய ஹாரி ப்ரூக், அதன்பிறகு பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. டெல்லி அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அரைசதம் விளாசினார். எனினும் மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, கேப்டன் மார்க்ரம் விக்கெட்டை விரைவில் பறிகொடுப்பது சன்ரைசர்ஸ் அணிக்கு மைனஸ். எனினும் விக்கெட் கீப்பர் கிளாசென், அப்துல் சமத் ஆகியோர் நம்பிக்கை தருகின்றனர்.

பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், அகில் ஹூசைன் ரன்களை வாரி வழங்குவதை கட்டுப்படுத்துவது அவசியம். இன்றைய ஆட்டத்தில் ஹூசைனுக்கு பதிலாக மார்கோ ஜான்சென் களம் இறக்கப்படலாம். சுழற்பந்து வீச்சாளர் மயங்க் மார்க்கண்டே நம்பிக்கை அளிக்கிறார். டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியை போல இன்றைய ஆட்டத்திலும், தமிழ்நாட்டு வீரர் நடராஜன் இம்பேக்ட் வீரராக களம் இறக்கப்படலாம். புள்ளிப்பட்டியலில் அடுத்தக்கட்டத்துக்கு முன்னேற இன்றைய போட்டி முக்கியம் என்பதால், இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கலாம்.

போட்டி எங்கே?: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் இன்றைய லீக் ஆட்டம், ஹைதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இதுவரை எப்படி?: ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 24 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் சன்ரைசர்ஸ் 9, கொல்கத்தா 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு சீசனில் இரு அணிகளும் மோதிய கடந்த ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

கொல்கத்தா உத்தேச அணி: ஜேசன் ராய், குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ஜெகதீசன்/மந்தீப் சிங், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆந்த்ரே ரசல், ஷர்துல் தாகூர், சுனில் நரேன், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ரம் (கேப்டன்), ஹாரி ப்ரூக், கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், அகீல் ஹூசைன், மயங்க் மார்க்கண்டே, புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக், நடராஜன்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.