மொகாலி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் பெங்களூரு அணிக்கு கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் பஞ்சாப் அணியில் காயம் காரணமாக கேப்டன் ஷிகர் தவான் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக சாம் கரன் அணியை வழிநடத்துகிறார். டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண், பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி விராட் கோலியும், டுபிளெஸ்ஸியும் ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினர். கோலி 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பிரார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய டுபிளெஸ்ஸி 84 ரன்களில் வெளியேறினார். இதில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும். பின்னர் களம் இறங்கிய மேக்ஸ்வெல் 0, தினேஷ் கார்த்திக் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் அணியில் பந்துவீச்சை பொறுத்தவரை ஹர்ப்ரீத் பிரார் 2 விக்கெட்களை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், நேதன் எல்லீஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.