மும்பை : 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 31வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பஞ்சாப் வீரர்களை பேட்டிங்குக்கு களமிறங்குமாறு அழைத்தார்.
பஞ்சாப் அணியின் இன்னிங்சை மேத்யூ ஷார்ட், பிரத்சிம்ரான் ஆகியோர் தொடங்கினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியை மும்பை வீரர் கேம்ரூன் கிரீன் பிரித்தார். அவரது பந்து வீச்சில் தொடக்க வீரர் மேத்யூ 11 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் துரித ஆட்டத்தில் ஈடுபட்டாலும் சீரான இடைவெளியில் பஞ்சாப் அணிக்கு விக்கெட் வீழ்ச்சி நடைபெற்றுக் கொண்டே தான் இருந்தது.
அதர்வா டெய்டு 29 ரன், லிவிங்ஸ்டோன் 10 ரன், ஹர்தீப் சிங் 41 ரன் என தங்கள் பங்குக்கு ரன் அடித்து கொடுத்து ஆட்டமிழந்தனர். இதனிடையே களமிறங்கிய கேப்டன் சாம் கரன் நிலைத்து நின்று விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். அதிரடியாக ஆடிய சாம் கரன் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பி அணியின் ரன் விகிதத்தை கணிசமாக உயர்த்தினார்.
அரை சதம் தாண்டி விளையாடிக் கொண்டு இருந்த சாம் கரன் (55 ரன்), ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா 25 ரன்கள் அடித்து அணிக்கு வலு சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது.
உள்ளூர் மைதானத்தில் பஞ்சாப் அணியை 214 ரன்கள் எடுக்க வைத்து மும்பை இந்தியன்ஸ் அணி பெரும் தவறு செய்து விட்டது என்பதை அந்த அணியின் வீரர்கள் பின்னர் உணர்ந்திருப்பர். மும்பை அணியில் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் 3 ஓவர்கள் வீசி 48 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
மற்றபடி கேம்ரூன் கிரீன், பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், பெஹரென்ட்ராப், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 214 ரன்கள் என்ற சற்று கடின இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது. மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ஷ்டகரமாக அமையவில்லை.
தொடக்க வீரர் இஷான் கிஷன் 1 ரன்னில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். மற்றொரு தொடக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் கேமரூன் கிரீன் அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். நிதான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினாலும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்ப இருவரும் தவறவில்லை.
அரை சதத்தை நோக்கி பயணித்த ரோகித் சர்மா திடீரென 44 ரன்களில் ஆட்டமிழந்தார். லிவிங்ஸ்டன் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். இதனிடையே கைகோர்த்த சூர்யகுமார் யாதவ் நீண்ட நாட்களுக்கு பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி குழுமியிருந்த ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
மறுபுறம் அரைசதம் கடந்த கேமரூன் கிரீன் 3 சிக்சர் 6 பவுண்டரி என 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடந்து சூர்யகுமார் யாதவும் 3 சிக்சர் 7 பவுண்டரி என 57 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் மும்பை அணிக்கு இக்கட்டான சூழல்நிலை ஏற்பட்டது. டிம் டேவிட் ஒருபுறம் போராட மறுபுறம் திலக் வர்மா, நேஹல் வதேரா ஆகியோர் அடுத்தடுத்து அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு மும்பை அணியால் 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. 55 ரன்கள் குவித்த சாம் கரன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
-
In Match 3️⃣1️⃣ of #TATAIPL between #MI & #PBKS
— IndianPremierLeague (@IPL) April 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Here are the Upstox Most Valuable Asset, Herbalife Active Catch of the match & Visit Saudi Beyond the Boundaries Longest 6 award winners.@upstox | #InvestRight with Upstox@Herbalifeindia@VisitSaudi | #VisitSaudi | #ExploreSaudi pic.twitter.com/ezbnshp8LF
">In Match 3️⃣1️⃣ of #TATAIPL between #MI & #PBKS
— IndianPremierLeague (@IPL) April 22, 2023
Here are the Upstox Most Valuable Asset, Herbalife Active Catch of the match & Visit Saudi Beyond the Boundaries Longest 6 award winners.@upstox | #InvestRight with Upstox@Herbalifeindia@VisitSaudi | #VisitSaudi | #ExploreSaudi pic.twitter.com/ezbnshp8LFIn Match 3️⃣1️⃣ of #TATAIPL between #MI & #PBKS
— IndianPremierLeague (@IPL) April 22, 2023
Here are the Upstox Most Valuable Asset, Herbalife Active Catch of the match & Visit Saudi Beyond the Boundaries Longest 6 award winners.@upstox | #InvestRight with Upstox@Herbalifeindia@VisitSaudi | #VisitSaudi | #ExploreSaudi pic.twitter.com/ezbnshp8LF
இதையும் படிங்க : LSG vs GT: கடைசி ஓவர் வரை திக்..திக்.. லக்னோ அணி போராடி தோல்வி!