மொகாலி : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றியை நோக்கி மும்பை அணி பயணித்து வருகிறது.
16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மொகாலி ஐ.எஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்ற 46வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணியின் இன்னிங்சை பிரப்சிம்ரன் சிங் மற்றும் கேப்டன் ஷிகர் தவான் தொடங்கினர். தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 9 ரன்கள் மட்டும் எடுத்து அர்ஷத் கான் பந்து வீச்சில் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தவான் மற்றும் மேத்யூ ஷார்ட் பஞ்சாப் அணியின் ஸ்கோர் கணக்கை அதிகரிக்க அடித்து ஆடத் தொடங்கினர்.
ஷிகர் தவான் 30 ரன், மேத்யூ ஷார்ட் 27 ரன் என தங்கள் பங்குக்கு ரன் அடித்து கொடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அடுத்து களமிறங்கிய லிவிங்ஸ்டான் மற்றும் ஜித்தேஷ் சர்மா அணியின் நிலை உணர்ந்து அடித்து ஆடத் தொடங்கினர். ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பி இருவரும் உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினர்.
அடித்து ஆடிய லிவிங்ஸ்டான் 4 சிக்சர் 7 பவுண்டரி என விளாசி 82 ரன்கள் குவித்தார். மறுபுறம் ஜித்தேஷ் சர்மாவும் 49 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி 214 ரன்கள் எடுத்தது.
215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மும்பை அணி ஆட்டத்தை தொடங்கியது. ரன் கணக்கை துவங்கும் முன்னரே மும்பை அணி விக்கெட் கணக்கை துவங்கியது. ரோகித் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் தன் பங்குக்கு 75 ரன்கள் விளாசினார்.
அவரைப் போல் கேமரூ கிரீனுன் தன் பங்குக்கு 23 ரன்கள் எடுத்துக் கொடுத்து வெளியேறினார். அணியின் நிலை உணர்ந்து அடித்து ஆடிய சூர்யகுமார் யாதவ் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி அணியின் ஸ்கோரை சீரான இடைவெளியில் உயர்த்தினார். இறுதியில் அவரும் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து மும்பை அணி விளையாடி வருகிறது. மும்பை அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 21 ரன் தேவைப்படுகிறது. எப்படியும் இந்த ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெறும் என அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க : LSG vs CSK: 'அடடா மழைடா அட மழைடா'... ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிப்பு!