ETV Bharat / sports

வலிமை அப்டேட்டை மறக்க முடியுமா - மனம் திறந்த மொயின் அலி - வலிமை அப்டேட்

சென்னை டெஸ்ட் போட்டியின்போது ரசிகர் ஒருவர் வலிமை திரைப்பட அப்டேட் குறித்து கேட்டது என்றும் என் நினைவில் இருக்கும் என இங்கிலாந்து வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.

MOEN ALI ABOUT VALIMAI UPDATE
MOEN ALI ABOUT VALIMAI UPDATE
author img

By

Published : Sep 28, 2021, 8:52 PM IST

கரோனா காராணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 சீசன் தற்போது மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் இங்கிலாந்து வீரர் மொயின் அலி, அஜித் நடிக்கும் வலிமை திரைப்படம் தொடர்பாக தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் வெளியிட்டுள்ள காணொலியில் மொயின் அலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறித்தும், சென்னையில் டெஸ்ட் போட்டி விளையாடியது குறித்து அனுபவம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

2 விஷயங்களை மறக்க மாட்டேன்

அதில் மொயின் அலி," கரோனா தொற்று காலத்தில் சென்னை டெஸ்ட் போட்டியில் விளையாடியது நல்ல அனுபவமாக இருந்தது. அந்த போட்டியில் இரண்டு விஷயங்கள் என்றும் மறக்க முடியாதது. அதில் ஒன்று, பார்வையாளர் ஒருவர் வலிமை திரைப்படம் குறித்து என்னிடம் கேள்வி கேட்டது" என்றார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்க இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியாவில் நடைபெற்றது. இதில் முதல் இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், அடுத்த இரண்டு போட்டிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலும் நடைபெற்றது.

மொயின் அலி, சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி, இரண்டு இன்னிங்ஸிலும் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இந்நிலையில், மொயின் அலி நேற்று (செப். 28) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.