லக்னோ : 16 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. 10 ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் வீரர்கள் அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் மயங்க் அகர்வால் ஆட்டத்தை தொடங்கினர்.
8 ரன்கள் எடுத்திருந்த போது மயங்க் அகர்வால் குருணல் பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் அன்மோல்ப்ரீத்துடன், ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் குருணல் பாண்ட்யா பந்துவீச்சில் அன்மோல் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதி 34 ரன்களில் நடையை கட்டினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மார்க்ரம் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
ஹேரி புரூக் 3, வாஷிங்டன் சுந்தர் 16, அடில் ரஷித் 4, உம்ரான் மாலிக் டக் அவுட் என ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. அப்துல் சமத் 21 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
பந்துவீச்சை பொறுத்தவரை லக்னோ அணியில் அதிகபட்சமாக குருணல் பாண்ட்யா 3 விக்கெட்களை எடுத்தார். அமித் மிஸ்ரா 2, யாஷ் தாகூர், ரவி பீஷ்னோய் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 122 ரன்கள் வெற்றி இலக்குடன், லக்னோ அணி ஆட்டத்தை தொடங்கியது. எளிய இலக்காக இருந்தாலும் லக்னோ அணியிலும் சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்த வண்ணம் இருந்தது.
கெய்ல் மேயர்ஸ் 13 ரன், கேபடன் கே.எல். ராகுல் 35 ரன் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் லக்னோ அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. சன்ரைசர்ஸ் அணி பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீசி எதிரணி வீரர்களை களங்கடித்துக் கொண்டு இருந்தனர். மறுமுனையில் பந்து வீச்சை போல் பேட்டிங்கிலும் குருணால் பாண்ட்யா ஜொலிக்கத் தொடங்கினார்.
ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு திருப்பி விட்டு அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 4 பவுண்டரி, 1 சிக்சர் என 34 விளாசிய குருணால் பாண்ட்யா அணியின் வெற்றியை உறுதி செய்தார். 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து லக்னோ அணி அபார வெற்றி பெற்றது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் மிரட்டிய குர்ணால் பாண்ட்யா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
-
In Match 10 of #TATAIPL between #LSG & #SRH
— IndianPremierLeague (@IPL) April 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Here are the Visit Saudi Beyond the Boundaries Longest 6, Upstox Most Valuable Asset, Herbalife Active Catch of the match award winners.@VisitSaudi | #VisitSaudi | #ExploreSaudi@upstox | #InvestRight with Upstox@Herbalifeindia pic.twitter.com/cKIFGLiJvB
">In Match 10 of #TATAIPL between #LSG & #SRH
— IndianPremierLeague (@IPL) April 7, 2023
Here are the Visit Saudi Beyond the Boundaries Longest 6, Upstox Most Valuable Asset, Herbalife Active Catch of the match award winners.@VisitSaudi | #VisitSaudi | #ExploreSaudi@upstox | #InvestRight with Upstox@Herbalifeindia pic.twitter.com/cKIFGLiJvBIn Match 10 of #TATAIPL between #LSG & #SRH
— IndianPremierLeague (@IPL) April 7, 2023
Here are the Visit Saudi Beyond the Boundaries Longest 6, Upstox Most Valuable Asset, Herbalife Active Catch of the match award winners.@VisitSaudi | #VisitSaudi | #ExploreSaudi@upstox | #InvestRight with Upstox@Herbalifeindia pic.twitter.com/cKIFGLiJvB
இதையும் படிங்க : தஞ்சாவூரில் ஆய்வின்போது பிரதமர் மற்றும் முதல்வர் படம் வைப்பதில் சலசலப்பு