ETV Bharat / sports

LSG vs GT: ஐபிஎல் களத்தில் மல்லுக்கட்டும் அண்ணன் - தம்பி; வெல்லப்போவது யார்? - லக்னோ குஜராத் அணிகள் மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன. பிற்பகல் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இரவு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஹைதராபாத் அணியுடன், ராஜஸ்தான் ராயல்ஸ் மோதுகிறது.

Today match
இன்றைய போட்டி
author img

By

Published : May 7, 2023, 2:11 PM IST

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் Rivalry week போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (மே 7) நடைபெறும் 51வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 11 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. அவருக்குப் பதிலாக கருண் நாயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இக்கட்டான சூழலில் அணியை வழிநடத்தும் பொறுப்பு க்ருணல் பாண்ட்யாவிடம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் கடைசியாக சென்னை அணியுடன் லக்னோ அணி மோதியது. ஆனால், மழை குறுக்கிட்டதால் அந்த ஆட்டம் கைவிடப்பட்டது.

டி காக்கிற்கு வாய்ப்பு?:கைல் மேயர்ஸ், ஸ்டொய்னிஸ், நிகோலஸ் பூரன், படோனி ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனர். இன்றைய ஆட்டத்தில் குயின்டான் டி காக் களம் இறங்குவார் என எதிர்பார்க்கலாம். பந்துவீச்சில் நவீன்-உல்-ஹக், ரவி பீஷ்னோய் ஆகியோரும் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கக் கூடியவர்கள். ஒட்டுமொத்த அணியும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தால், குஜராத் அணிக்கு முட்டுக்கட்டைப் போடலாம்.

குஜராத் எப்படி?: வலிமையான பேட்டிங் ஆர்டரைக் கொண்ட குஜராத் அணி, எதிரணிகளை மிரட்டி வருகிறது. சாஹா, கில், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், மில்லர் எனப் பெரிய பேட்டிங் பட்டாளமே அந்த அணியில் உள்ளது. 10 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. பந்துவீச்சில் முகமது ஷமி, ரஷீத் கான், நூர் அகமது ஃபார்மில் இருப்பதால், லக்னோ அணிக்கு நெருக்கடி கொடுப்பார்கள்.

Brothers
அண்ணன் - தம்பி மோதல்

சகோதரர்களான க்ருணல் பாண்ட்யா - ஹர்திக் பாண்ட்யா தலைமையில் முதன்முறையாக இரு அணிகள் மோதுவதால், இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆட்டம் எங்கே?: லக்னோ - குஜராத் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

லக்னோ உத்தேச அணி: கைல் மேயர்ஸ், குயின்டான் டி காக், கரண் சர்மா/பிரிராக் மன்கட், க்ருணல் பாண்ட்யா (கேப்டன்), நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, கே.கவுதம், மொஷின் கான், ரவி பீஷ்னோய், ஆவேஷ் கான்/யஷ் தாகூர், அமித் மிஸ்ரா.

குஜராத் உத்தேச அணி: சாஹா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபிநவ் மனோகர், ராகுல் திவாட்டியா, ரஷீத் கான், அல்சாரி ஜோசப், நூர் அகமது, முகமது ஷமி, மொகித் சர்மா.

Rajastan VS Hydrebad
ராஜஸ்தான் vs ஹைதராபாத்

மற்றொரு ஆட்டம்: இந்நிலையில் இரவு நடைபெறும் 52வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பல வியூகங்களை வகுத்தும் ஹைதராபாத் அணியின் பேட்டிங்கில் முன்னேற்றம் இல்லை.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய ஹாரி ப்ரூக் அதன்பிறகு ஃபார்மை இழந்து தவிக்கிறார். கேப்டன் மார்க்ரம், கிளாசென் பேட்டிங்கில் நம்பிக்கைத் தருகின்றனர். ஆனால், மற்ற பேட்ஸ்மேன்கள், நிலைத்து நின்று விளையாடத் தவறுகின்றனர். பந்துவீச்சில் தமிழ்நாடு வீரர் நடராஜன் டெத் ஓவர்களை சிறப்பாக வீசுகிறார். அவரது யார்க்கர் பந்துகள் எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி தரும். மயங்க் மார்க்கண்டேவும் ஆறுதல் அளிக்கிறார்.

காவ்யாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்: இது ஒருபுறம் இருக்க, ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் குறித்த மீம்ஸ்கள், சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. கொல்கத்தா அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால், காவ்யா மாறன் கடும் அதிருப்தி அடைந்தார். சோகத்தில் இருந்த அவரது புகைப்படங்களை டிவிட்டரில் பதிவிட்ட நெட்டிசன்கள், சிலர் கிண்டல் செய்தனர். அதேநேரம் அவரை தேற்றியும் சிலர் கருத்துகளைப் பதிவிட்டனர்.

nettizens
கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. ஜெய்ஸ்வாலின் அதிரடி அணிக்கு வலுசேர்க்கும். அதிரடி வீரர் பட்லர் ஃபார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கேப்டன் சாம்சன், படிக்கல், ஹெட்மேயர் நிலைத்து நின்று ஆட வேண்டும். எனினும், பந்துவீச்சில் ராஜஸ்தான் அணி பலமாக உள்ளது. டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, சாஹல், அஸ்வின் ஆகியோர் ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு பிளஸ்.

போட்டி எங்கே?: இரு அணிகளும் மோதும் ஆட்டம் ஜெய்ப்பூரில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ராஜஸ்தான் உத்தேச அணி: ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஹெட்மேயர், ஜூரெல், அஸ்வின், ஹோல்டர்/ஆடம் ஸம்பா, டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, சாஹல், குல்தீப் யாதவ்.

ஹைதராபாத் உத்தேச அணி: அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, மார்க்ரம் (கேப்டன்), ஹேரி ப்ரூக்/பிலிப்ஸ், கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத். மார்கோ ஜான்சென், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்க்கண்டே, உம்ரான் மாலிக், நடராஜன்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.