ETV Bharat / sports

KKR Vs SRH: போராடி வரும் கொல்கத்தா!

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து, 229 ரன்களை கொல்கத்தா அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

KKR Vs SRH: போராடி வரும் கொல்கத்தா!
KKR Vs SRH: போராடி வரும் கொல்கத்தா!
author img

By

Published : Apr 14, 2023, 7:40 PM IST

Updated : Apr 14, 2023, 10:59 PM IST

கொல்கத்தா: நடப்பு ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் 2023, கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஐபிஎல் 2023 போட்டியில் இன்று (ஏப்ரல் 14) நடைபெறும் 19ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கில் களம் இறங்கியது.

இந்த நிலையில் ஹைதராபாத் அணியின் மயங்க் அகர்வால் மற்றும் ராகுல் திரிபாதி ஆகிய வீரர்கள் தலா 9 ரன்களிலும், கேப்டன் எய்டன் மார்க்ரம் 50, மற்றும் அபிஷேக் ஷர்மா 32 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதேநேரம் ஹாரி புரூக் 3 சிக்ஸ் மற்றும் 12 பவுண்டரிகள் என அதிரடியாக விளையாடி சதம் அடித்து, அவுட் ஆகாமல் இருந்தார். இவர் உடன் ஹெயின்ரிச் கிளாசன் 16 ரன்களுடன், அவுட் ஆகாமல் இன்னிங்ஸை நிறைவு செய்தார்.

மேலும் இந்த இன்னிங்ஸில் கொல்கத்தா அணியின் ரசல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால், ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் 229 ரன்கள் என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களம் இறங்கியது. இந்த நிலையில் கொல்கத்தாவின் ஜெகதீஷன் 36, வெங்கடேஷ் ஐயர் 10 ரசல் 3 ரன்களிலும், குர்பாஜ் மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரும் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர்.

மேலும் நிதிஷ் ரடானா அரைசதம் கடந்து 69 ரன்களிலும்,ரிங்கு சிங் 32 ரன்களிலும் விளையாடி வருகின்றனர். எனவே இதுவரை 16 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் தற்போது வரை, ஹைதராபாத் அணியின் ஜான்சென் மற்றும் மார்கண்டே தலா 2 விக்கெடுகளையும் புவனேஷ்வர் குமார் 1 விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர்.

இன்றைய ஆட்டத்தில் நிதிஷ் ராணாவை கேப்டனாகக் கொண்டு, பந்து வீச்சில் களம் கண்டுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிளேயிங் 11இல், ரஹ்மானுல்லா குர்பாஜ் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், நாராயண் ஜெகதீசன், ஆண்ட்ரீ ரசல், ரிங்கு சிங், ஷர்துல் தாகுர், லாக்கி ஃபெர்குசன், உமேஷ் யாதவ், சுயாஷ் ஷர்மா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ஆடுகின்றனர்.

அதேபோல் எய்டன் மார்க்ரமை கேப்டனாகக் கொண்டு பேட்டிங்கில் களம் இறங்கி உள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் 11இல், ஹெயின்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், ஹாரி புரூக், ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா, மார்கோ ஜான்சன், மயங்க் மார்கண்டே, புவனேஸ்வர் குமார், டி.நடராஜன் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் விளையாடுகின்றனர்.

மேலும் இதுவரையிலான ஐபிஎல் 2023 போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 வெற்றி, 1 தோல்வி என 3 போட்டிகளில் விளையாடி புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. அதேநேரம் 1 வெற்றி, 2 தோல்வி என 3 போட்டிகளில் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: KKR vs SRH: அதிரும் ஈடன் கார்டன்! அடங்காத கொல்கத்தா, அசத்துமா ஹைதராபாத்?

Last Updated : Apr 14, 2023, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.