ETV Bharat / sports

டஃப் கொடுத்த டெல்லிக்கு டாட்டா காட்டிய கேகேஆர்; பைனல் சென்னை vs கொல்கத்தா - கேகேஆர்

ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

KKR beat DC
KKR beat DC
author img

By

Published : Oct 14, 2021, 7:39 AM IST

சார்ஜா: ஐபிஎல் 2021 சீசனின் லீக் சுற்றுகள் நிறைவுபெற்று, பிளே-ஆஃப் சுற்று கடந்த அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கியது. முதல் குவாலிஃபயர் போட்டியை வென்று சென்னை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் சென்றது. அடுத்து, நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தா, இரண்டாவது குவாலிஃபயர் சுற்றுக்குத் தகுதிபெற்றது.

இந்நிலையில், இறுதிப்போட்டிக்கான இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சந்தித்தது.

சோர்வான தொடக்கம்

சார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். அதன்படி, களமிறங்கிய டெல்லி அணி ரன் குவிக்க மிகவும் சிரமப்பட்டது.

பவர்-பிளே ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட்டை இழந்து 38 ரன்களையே எடுத்தது. இறுதிகட்டத்தில், ஸ்ரேயஸ், ஹெட்மயர் சற்று கைக்கொடுக்க 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக தவான் 36, ஸ்ரேயஸ் 30 ரன்களையும் எடுத்தனர்.

கேகேஆர் மாஸ் ஓப்பனிங்

கொல்கத்தா பந்துவீச்சுத் தரப்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளையும், சிவம் மவி, பெர்குசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து, கொல்கத்தா அணி 136 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது.

கொல்கத்தா அணி தொடக்க வீரர்கள் சுப்மன் கில் ஒருமுனையில் பொறுமையாக விளையாட, மறுமுனையில் வெங்கடேஷ் ஐயர் சற்று அதிரடி காட்டினார். இதனால், பவர்பிளே ஓவர்களில் கொல்கத்தா அணி 51 ரன்களைக் குவித்தது. வெங்கடேஷ், தான் சந்தித்த 38ஆவது பந்தில் அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

12 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில், ஒரு விக்கெட்டுகூட விழவில்லை. ரபாடா வீசிய 13ஆவது ஓவரில் முதல் விக்கெட்டாக வெங்கடேஷ் 55 (41) ரன்களில் வெளியேறினார். அவர் 4 பவுண்டரிகள், மூன்று சிக்சர்களைக் குவித்தார்.

டஃப் கொடுத்த டெல்லி

அப்போது, கேகேஆர் அணி வெற்றிக்கு 42 பந்துகளில் 38 ரன்களே தேவைப்பட்டது. இதையடுத்து, களமிறங்கிய ராணா 13 (12), சுப்மன் கில் 46 (46) அடுத்தடுத்த ஓவர்களில் பெவிலியன் திரும்பினர். மிகக் முக்கியமான 18ஆவது ஓவரை வீசிய ரபாடா, 1 ரன்னை மட்டும் விக்கெட் கொடுத்து கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக்கை டக்-அவுட்டாக்கினார்.

இதேபோல், அடுத்த ஓவரை வீசிய நோர்க்கியாவும் 3 ரன்களை மட்டும் கொடுத்து, கடைசி பந்தில் மோர்கனை டக்-அவுட்டாக்க ஆட்டத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இதனால், கேகேஆர் அணிக்கு கடைசி ஆறு பந்துகளில் 7 ரன்கள் வேண்டிய நிலையில், பந்துவீச அஸ்வின் வந்தார்.

ராகுல் திரிபாதி 1 ரன்னை எடுத்து, ஷகிப் அல்-ஹசனுக்கு ஸ்ட்ரைக்கை மாற்றினார். ஷகிப் இரண்டாவது பந்தை வீணாக்க, மூன்றாவது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.

வெற்றியும் 4 டக்-அவுட்களும்

எலிமினேட்டரில் பெங்களூருவுக்கு எமனாக இருந்த நரைன், முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்ப டெல்லி அணிக்கு தலை-கால் புரியவில்லை.

இப்போது, இரண்டு பந்துகளில் 6 ரன்கள் தேவை, பேட்டிங் முனையில் திரிபாதி இருந்தார். அஸ்வினுக்கு இப்போது ஹாட்ரிக் வாய்ப்பும் ஏற்பட, அவர் தனது சுழல் ஜாலத்தால் ரன்களை நிச்சயம் கட்டுப்படுத்திவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஐந்தாவது பந்தில் லாங்-ஆப் திசையில் தூக்கி அடித்து சிக்சருக்குப் பறக்கவிட்டார் திரிபாதி.

கேகேஆர் அணி வெற்றி வாய்ப்பு எளிமையாக இருந்தபோதிலும், கடைசி நான்கு ஓவர்களில் டெல்லி அணி பார்வையாளர்களைப் பதறவைத்தவிட்டது. கடைசி நான்கு ஓவர்களில் 13 ரன்களை எடுப்பதற்கு கேகேஆர் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. அதிலும், நான்கு பேர் டக்-அவுட்டானது குறிபிடத்தக்கது.

சூப்பர் கிங்ஸ் vs நைட் ரைடர்ஸ்

கேகேஆர் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்றது. டெல்லி அணி பந்துவீச்சில் நோர்க்கியா, அஸ்வின், ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக வெங்கேடஷ் ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி, நாளை (அக். 15) துபாய் பன்னாட்டு மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்குமுன், இவ்விரு அணிகளும் 2012ஆம் ஆண்டின் இறுதிப்போட்டியில் மோதின. அந்த ஆண்டு கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கடைசிவரை ஆர்சிபியில்தான் வேட்டையும் வாழ்க்கையும் - கோலி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.