ஐபிஎல் 2022ஆம் ஆண்டிற்கான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோவுடன் மோதுகிறது. இதற்கு முந்தைய போட்டியில் தோல்வியடைந்த சென்னை இந்த ஆட்டத்தில் தன் சீற்றத்தை காட்டுமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.
ஒரே ரன்னில் ஓரம் போன ஓபனர்: சென்னை அணியின் ஓபனர் ரூதுராஜ் 5ஆவது ஓவரில் திடீரென்று ரன் அவுட் ஆனார். முன்னதாக ஆடிய கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்திலும் உடனே அவுட்டானது குறிப்பிடத்தக்கது. 7ஆவது ஓவரில் மற்றொரு ஓபனரான ராபின் உத்தப்பாவும் லக்னோ அணியின் ரவியின் பந்து வீச்சிற்கு LBWவிற்கு லக்னோ அணி அப்பீல் செய்திருந்தது. இதனையடுத்து ராபின் உத்தப்பாவும் அவுட்டானார்.
அடுத்தடுத்து லக்னோ பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது, சென்னை சூப்பர் கிங்ஸ். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்து இருந்தது. அதிகபட்சமாக உத்தப்பா 26 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்திருந்தார்.
லக்னோவிற்கு லாபம்!: அடுத்து விளையாடிய லக்னோ அணியில் முதல் 11வது ஓவர் முடிவில் விக்கெட் ஏதும்இன்றி 106 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்த 11ஆவது ஓவரில் ராகுல் மற்றும் மணிஷ் பாண்டே அடுத்தடுத்து அவுட்டாகினர். தற்போது 14ஆவது ஓவரில் 128 ரன்களைக் கடந்துள்ளது.
தோனி புதிய சாதனை:டி20 போட்டிகளில் 7000 ரன்களை குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தோனி 5ஆவது இடத்தை பிடித்தார். இந்தப் பட்டியலில் கோலி 10,326 ரன்களுடன் முதலிடத்திலும், ரோஹித் 9,936 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் தவான் (8,818 ரன்கள்)உத்தப்பா(7,120ரன்கள்), ஆகியோர் உள்ளனர். தற்போது தோனி 7001 ரன்களுடன் 5வது இடம் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2022: கொல்கத்தாவை வீழ்த்திய பெங்களூரு