ETV Bharat / sports

RCB vs DC: டெல்லி அணிக்கு 175 ரன்கள் இலக்கு! - டெல்லி பெங்களூரு அணிகள் மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு 175 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்
IPL Cricekt
author img

By

Published : Apr 15, 2023, 4:45 PM IST

Updated : Apr 15, 2023, 5:37 PM IST

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு அணியில் விராட் கோலி, கேப்டன் டுபிளெஸ்ஸி ஆட்டத்தை தொடர்ந்தனர்.

சிறப்பாக விளையாடிய கோலி அரைசதம் அடித்து அசத்தினார். எனினும் அவர் லலித் யாதவ் பந்துவீச்சில் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் டுபிளெஸ்ஸி 22, லோம்ரர் 26, மேக்ஸ்வெல் 24 ரன்களில் வெளியேறினர். ஹர்ஷல் படேல் 6, தினேஷ் கார்த்திக் 0 ரன்களில் பெவிலியன் திரும்பினர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. சபாஸ் அகமது 20, அர்ஜூன் ராவத் 15 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

டெல்லி அணி தரப்பில் மிட்செல் மார்ஷ், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களையும், அக்சர் படேல், லலித் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

Last Updated : Apr 15, 2023, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.