பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி விராட் கோலி, டு பிளெஸ்ஸி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இந்நிலையில் போல்ட் பந்துவீச்சில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சபாஸ் அகமது 2 ரன்களில் வெளியேறினார். எனினும், கேப்டன் டு பிளெஸ்ஸி, மேக்ஸ்வெல் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர்.
டு பிளெஸ்ஸி 62, மேக்ஸ்வெல் 77 ரன்களில் வெளியேறினர். எனினும் பின்னால் வந்த வீரர்கள் ரன் சேர்க்க தவறினர். லோம்ரோர் 8, தினேஷ் கார்த்திக் 16, பிரபுதேசாய் 0, ஹசரங்கா 6, வைசாக் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை எடுத்தது. டேவிட் வில்லே 4, சிராஜ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணியில் பந்துவீச்சை பொறுத்தவரை போல்ட் 2, சந்தீப் சர்மா 2, அஸ்வின், சாஹல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.