ETV Bharat / sports

KKR Vs RR : அடுத்த சுற்றில் நீடிக்குமா ராஜஸ்தான்... வாழ்வா? சாவா? ஆட்டத்தில் கொல்கத்தா!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் கொல்கத்தா அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்கிறது.

IPL 2023
IPL 2023
author img

By

Published : May 11, 2023, 7:50 PM IST

கொல்கத்தா : 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 56வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் இனி வரும் ஆட்டங்கள் அனைத்தும் முக்கியமானவையே. புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகளே அடுத்த சுற்றான பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

இதனால், இனி வரும் ஆட்டங்கள் அணிகளுக்கு வாழ்வா, சாவா என்பது போன்றாகும். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 56வது லீக் ஆட்டத்தில் மல்லுக்கட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. புள்ளிப் பட்டியலில் இரு அணிகளும் தலா 10 புள்ளிகளுடன் உள்ளன.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடிக்கும். அதனால் புள்ளிப் பட்டியலில் இருப்பிடத்தை தக்கவைக்க இரு அணிகளும் போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய 11 போட்டிகளில் 5ல் வெற்றி, 6ல் தோல்வியும் கண்டு, பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய 2 போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது.

மறுபுறம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு சீசனில் முதல் 5 போட்டிகளில் 4 வெற்றிபெற்றது. அதனைத்தொடர்ந்து அடுத்த 6 போட்டிகளில் 5ல் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் அந்த அணி அடுத்தசுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற கடும் நெருக்கடியில் உள்ளது.

ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 14 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 12 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இரு அணிகளின் முழுவிவரம்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆந்திரே ரசல், சுனில் நரேன், ஷர்துல் தாக்கூர், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, ஜேசன் ராய், அனுக் ராய்,

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், ஜோ ரூட், துருவ் ஜூரெல், சிம்ரொன் ஹெட்மயர், ரவிச்சந்திரன் அஸ்வின், சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் பவுல்ட், கே.எம். அசிப்

இதையும் படிங்க : டெல்லியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. புள்ளி பட்டியலில் 2வது இடம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.