ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதுவரை 8 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்று (ஏப்ரல் 2) 9ஆவது லீக் ஆட்டம் மும்பையின் டிஒய் படில் மைதானத்தில் பிற்பகல் 03.30 மணிக்கு நடக்கிறது.
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலபரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் காணலாம்.
மும்பை அணியின் உத்தேச வீரர்கள்: சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(கீப்பர்), திலக் வர்மா, முருகன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ், பாசில் தம்பி, கீரன் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ்
ராஜஸ்தான் அணியின் உத்தேச வீரர்கள்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன்(கேப்டன்), ஜேம்ஸ் நீஷம், ரவி அஸ்வின், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், பிரசித் கிருஷ்ணா.
இதையும் படிங்க: ஐபிஎல் 2022: பஞ்சாபை வீழ்த்திய கொல்கத்தா அபார வெற்றி