மும்பை: ஐபிஎல் தொடரின் 56ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு (மே 9) 7:30 மணிக்கு டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடக்கிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் மும்பை அணி 10 போட்டிகளில், 2 வெற்றிகள் 8 தோல்விகள் என்ற கணக்கில் 4 புள்ளிகளுடன் 10ஆவது இடத்தில் உள்ளது. மறுப்புறம் கொல்கத்தா அணி 11 போட்டிகளில், 4 வெற்றிகள் 7 தோல்விகள் என்ற கணக்கில் 8 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது.
கொல்கத்தா அணி மீதமுள்ள 3 போட்டிகளில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பும், முதல் நான்கு இடத்தில் உள்ள அணிகள் அடுத்துள்ள 3 போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியடைந்தால் மட்டுமே சாத்தியம். மும்பை அணியை பொறுத்தவரை மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றாலும் 12 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும். இது பிளே ஆஃப் சுற்றுக்கு போதுமானதல்ல. இரு அணிகளின் உத்தேசப்பட்டியல் பின்வருமாறு.
மும்பை இந்தியன்ஸ்: ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, முருகன் அஷ்வின், குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித், டிம் டேவிட், கீரன் போலார்ட், டேனியல் சாம்ஸ்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், பாபா இந்திரஜித்(கீப்பர்), ஆரோன் பின்ச், அனுகுல் ராய், டிம் சவுத்தி, ஹர்ஷித் ராணா, சிவம் மாவி, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா.
இதையும் படிங்க: CSK vs DC: சென்னையிடம் சுருண்டது டெல்லி - கேகேஆரை பின்னுக்குத் தள்ளிய சிஎஸ்கே