ETV Bharat / sports

IPL 2022: இன்றைய ஆட்டம் பெங்களூரு vs ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டி

ஐபிஎல் தொடரின் 54ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ipl-2022-match-54-sunrisers-hyderabad-vs-royal-challengers-bangalore-in-maharashtra

author img

By

Published : May 8, 2022, 2:17 PM IST

மும்பை: ஐபிஎல் தொடரின் 54ஆவது லீக் ஆட்டம் வான்கடே மைதானத்தில் பிற்பகல் (மே 8) 3:30 மணிக்கு நடக்கிறது. இதில், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஹைதராபாத் அணி 10 போட்டிகளில் 5 வெற்றிகள் 5 தோல்விகள் என்ற கணக்கில் 10 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது. மறுப்புறம் பெங்களூரு அணி 11 போட்டிகளில் 6 வெற்றிகள் 5 தோல்விகள் என்ற கணக்கில் 12 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது.

பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய பெங்களூரு மீதமுள்ள நான்கு போட்டிகள் இரண்டில் வெற்றிபெற்றால் போதும். ஆனால், ஹைதராபாத் அணி மீதமுள்ள 5 போட்டிகளில் நான்கில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும். இரு அணி வீரர்கள் உத்தேசப்பட்டியல் பின்வருமாறு.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (கீப்பர்), ஷஷாங்க் சிங், சீன் அபோட், ஷ்ரேயாஸ் கோபால், புவனேஷ்வர் குமார், கார்த்திக் தியாகி, உம்ரான் மாலிக்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), மஹிபால் லோம்ரோர், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.

இதையும் படிங்க: LSG vs KKR: பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை நெருங்கிய லக்னோ அணி - கேகேஆர் படுதோல்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.