மும்பை: 15ஆவது ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி தொடங்கிய நிலையில், தொடர்ந்து மகாராஷ்டிராவில் உள்ள நான்கு மைதானங்களில் நடைபெற்று வருகின்றது. லீக் சுற்றுப்போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தொடரின் 48ஆவது லீக் சுற்றில், மயாங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளன.
குஜராத் அணி கடந்த 5 போட்டிகளை தொடர்ச்சியாக வென்றது உள்பட மொத்தம் 8 போட்டிகளில் வெற்றி பெற்று தனது பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துவிட்டது. சுப்மன் கில், சாஹா, ஹர்திக் பாண்டியா, மில்லர், ராகுல் தெவாட்யா என பேட்டர்கள் அனைவரும் மிரட்டலான ஃபார்மில் இருக்கின்றனர். பந்துவீச்சிலும் ஷமி, பெர்குசன், ரஷித் கான் எனப் பலம் வாய்ந்த பௌலர்கள் இருப்பதால் அனைத்து சூழலையும் அந்த அணி எளிதாக எதிர்கொண்டு வெற்றிவாகை சூடி வருகிறது.
பஞ்சாப் அணி பேட்டிங், பௌலிங் என அனைத்து விதத்திலும் குஜராத் அணிக்கு சளைத்ததில்லை. பேட்டிங்கில், அகர்வால், தவான், பானுகா ராஜபக்ஷ, லியம் லிவிங்ஸ்டன், பேர்ஸ்டோவ் என உலகத்தர வீரர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். இருப்பினும், அந்த அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. புள்ளிகள் பட்டியலில், குஜராத் அணி 16 புள்ளிகளுடன் (8 வெற்றி, 1 தோல்வி) முதல் இடத்திலும், பஞ்சாப் அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றி, 5 தோல்வி) 8ஆவது இடத்திலும் உள்ளன. மேலும், இந்தத் தொடரில் இவ்விரு அணிகளும் முன்னர் விளையாடிய போட்டியில், குஜராத் அணி த்ரில் வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
குஜராத் டைட்டன்ஸ் அணியினர்: சுப்மான் கில், விருத்திமான் சாஹா, டேவிட் மில்லர், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ராகுல் தெவாட்யா, ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, யாஷ் தயாள் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகிய வீரர்கள் குஜராத் டைட்டன்ஸ் அணியில் உள்ளனர்.
-
Eye of the 🐯... Aisi hai Sangy ji ki bowling accuracy 🔥🙌#SeasonOfFirsts #AavaDe #MatchDay #GTvPBKS pic.twitter.com/8ZyGhZmNbQ
— Gujarat Titans (@gujarat_titans) May 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Eye of the 🐯... Aisi hai Sangy ji ki bowling accuracy 🔥🙌#SeasonOfFirsts #AavaDe #MatchDay #GTvPBKS pic.twitter.com/8ZyGhZmNbQ
— Gujarat Titans (@gujarat_titans) May 3, 2022Eye of the 🐯... Aisi hai Sangy ji ki bowling accuracy 🔥🙌#SeasonOfFirsts #AavaDe #MatchDay #GTvPBKS pic.twitter.com/8ZyGhZmNbQ
— Gujarat Titans (@gujarat_titans) May 3, 2022
பஞ்சாப் கிங்ஸ்: மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், பானுகா ராஜபக்ச, ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (கேப்டன்), ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், சந்தீப் சர்மா, அர்ஷ்தீப் சிங் ஆகிய வீரர்கள் பஞ்சாப் கிங்ஸ் அணியில் உள்ளனர்.
-
🦁s are hot to trot 🔥#PunjabKings #SaddaPunjab #IPL2022 #ਸਾਡਾਪੰਜਾਬ #GTvPBKS pic.twitter.com/pFtHYuERyK
— Punjab Kings (@PunjabKingsIPL) May 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🦁s are hot to trot 🔥#PunjabKings #SaddaPunjab #IPL2022 #ਸਾਡਾਪੰਜਾਬ #GTvPBKS pic.twitter.com/pFtHYuERyK
— Punjab Kings (@PunjabKingsIPL) May 3, 2022🦁s are hot to trot 🔥#PunjabKings #SaddaPunjab #IPL2022 #ਸਾਡਾਪੰਜਾਬ #GTvPBKS pic.twitter.com/pFtHYuERyK
— Punjab Kings (@PunjabKingsIPL) May 3, 2022
இதையும் படிங்க: KKR vs RR: ரிங்கு சிங் அதிரடியால் ராஜஸ்தானை பழிதீர்த்தது கேகேஆர் !