ETV Bharat / sports

ஐபிஎல் 2022: இன்றைய ஆட்டம் பெங்களூரு vs ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் 39ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

ipl-2022-match-39-rcb-vs-rr-royal-challengers-bangalore-vs-rajasthan-royals

author img

By

Published : Apr 26, 2022, 1:55 PM IST

மும்பை: ஐபிஎல் தொடரின் 39ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு 7:30 மணிக்கு எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இதில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில், ராஜஸ்தான் அணி 7 போட்டிகளில் 5 வெற்றி 2 தோல்விகள் என்ற கணக்கில் 3ஆவது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 8 போட்டிகளில் 5 வெற்றிகள் 2 தோல்விகள் என்ற கணக்கில் 5ஆவது இடத்தில் உள்ளது.

இரு அணிகளிலும் தலா 10 புள்ளிகளை பெற்றுள்ளன. இந்த ஆட்டத்தில் வென்றால், 12 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறலாம். முன்னதாக 13ஆவது லீக் போட்டியில் இரு அணிகளும் மோதின. அதில் பெங்களூரு 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளின் உத்தேச பட்டியல்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்சல் படேல், வனிந்து ஹசரங்க டி சில்வா, ஜோஷ்ஹம் ஹசில்வூட்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், கருண் நாயர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், ஓபேட் மெக்காய், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.

இதையும் படிங்க: PBKS vs CSK: பஞ்சாபிடம் பம்மியது சிஎஸ்கே - ராயுடுவின் வாணவேடிக்கை வீண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.