ETV Bharat / sports

CSK vs MI: லாஸ்ட் பால் த்ரில்லர்- சிஎஸ்கே வெற்றி; 4 பந்துகளில் மும்பையை முடக்கிய தோனி! - சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், சென்னை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நட்சத்திர வீரர் தோனி 2 பவுண்டரிகள், 1 சிக்சர் என அடித்து வெற்றிகனியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

CSK vs MI
CSK vs MI
author img

By

Published : Apr 22, 2022, 6:37 AM IST

Updated : Apr 22, 2022, 7:17 AM IST

மும்பை: 15ஆவது ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் போட்டியில், ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் நேற்று (ஏப். 21) மோதின. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பவர்பிளேயில் பவர் காட்டிய முகேஷ்: அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 51 (43) ரன்களை குவித்தார். சென்னை தரப்பில் முகேஷ் சௌத்ரி 3 விக்கெட்டுகளையும், டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

லாஸ்ட் ஓவர்: இதனையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சென்னை பேட்டர்கள் களமிறங்கினர். எளிமையான இலக்கு என்றாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்ததால், சென்னை ரன்களை குவிக்க திணறியது. ஆட்டத்தின் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் பிரிடோரியஸ் அவுட்டாக பதற்றம் இன்னும் கூடியது.

ஸ்ட்ரைக்-இல் தோனி: இந்நிலையில், மூன்றாவது பந்தில் ஸ்ட்ரைக்கிற்கு வந்த தோனி, 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளை பறக்கவிட்டு சிஎஸ்கேவின் வெற்றியை உறுதிசெய்தார். இதன்மூலம், சென்னை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. சென்னை பேட்டிங்கில் அதிகபட்சமாக அம்பதி ராயுடு 40 (35) ரன்களை எடுத்தார். மும்பை பந்துவீச்சில் டேனியல் சாம்ஸ் 4 விக்கெட்டுகளையும், உனத்கட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

சென்னை அணிக்காக 3 ஓவர்கள் பந்துவீசி 19 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகேஷ் சௌத்ரி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 4 புள்ளிகளுடன் (2 வெற்றி, 5 தோல்வி) 9ஆவது இடத்திலும், மும்பை அணி புள்ளிகள் ஏதுமின்றி (7 தோல்வி) 10ஆவது இடத்திலும் உள்ளன. மேலும், சிஎஸ்கே வெற்றி பெற்றதால், புள்ளிப்பட்டியலில் அணிகளின் வரிசையில் எந்த மாற்றமும் இல்லை.

பெங்களூருவை முந்திய மும்பை: மும்பை அணி ஒரு வெற்றியைக் கூட பதிவுசெய்யாமல், தொடரில் தனது முதல் 7 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியைத் தழுவியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில், ஒரு அணி தனது முதல் 7 போட்டிகளிலும் தோல்வியடைந்திருப்பது இதுவே முதன்முறை. மேலும், இதற்கு முன்னர், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் (2013), ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் (2019) தங்களது முதல் 6 போட்டிகளில் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பொல்லார்ட் ஓய்வு அறிவிப்பு

Last Updated : Apr 22, 2022, 7:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.