ETV Bharat / sports

DC vs PBKS: இன்றைய ஆட்டம் டெல்லி vs பஞ்சாப்

author img

By

Published : Apr 20, 2022, 4:04 PM IST

ஐபிஎல் தொடரின் 32ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.

ipl-2022-match-32-dc-vs-pbks-delhi-capitals-vs-punjab-kings-in-mumbai-brabourne-stadium

மும்பை: ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் மகாராஷ்டிராவில் நடந்துவருகிறது. இன்று (ஏப். 20) 32ஆவது ஆட்டம் பிராபோர்ன் மைதானத்தில் நடக்கிறது. இதில், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முன்னதாக இந்த போட்டி புனேவின் டிஓய் பாட்டீல் மைதானத்தில் நடக்கவிருந்தது. ஆனால் டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் உள்பட மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மும்பையிலேயே நடக்கிறது.

டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் ஆடமாட்டார், அவருக்கு பதிலாக டிம் சேஃபெர்ட் கலந்துகொள்ளலாம் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புள்ளிப்பட்டியலில், டெல்லி அணி 5 போட்டிகளில் 2 வெற்றி 3 தோல்விகள் என்ற கணக்கில் 4 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் உள்ளது.

மறுப்புறம் பஞ்சாப் அணி, 6 போட்டிகளில் 2 வெற்றி 4 தோல்விகள் என்ற கணக்கில் 7ஆவது இடத்தில் உள்ளது. இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் பின்வருமாறு.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், டிம் சிஃபெர்ட்/அன்ரிச் நார்ட்ஜே, ரிஷப் பந்த் (கேப்டன் & கீப்பர்), ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், கலீல் அகமது.

பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (கீப்பர்), ஷாருக் கான், ஒடியன் ஸ்மித், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க: RCB vs LSG: டூ பிளேசிஸ் எழுச்சியால் 2ஆம் இடத்திற்கு முன்னேறிய ஆர்சிபி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.