மும்பை: ஐபிஎல் தொடரின் 42ஆவது லீக் ஆட்டம் எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இதில், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிவருகின்றன. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை குவித்தனர். அதிகபட்சமாக குயின்டன் டி காக் 37 பந்துகளுக்கு 46 ரன்களையும், தீபக் ஹூடா 28 பந்துகளுக்கு 34 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்து வீச்சில் ககிசோ ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அந்த வகையில் 154 ரன்கள் வெற்றி இலக்குடன் பஞ்சாப் அணி வீரர்கள் களமிங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: DC vs KKR: குல்தீப் சுழலிலும், பாவெல் பவரிலும் வென்றது டெல்லி