ETV Bharat / sports

IPL 2022 Double Header's: இன்றைய லீக் போட்டிகள்

ஐபிஎல் தொடரில் இன்றைய (ஏப். 30) மாலை போட்டியில், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரவு நடைபெறும் மற்றொரு போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

IPL 2022 Double Header
IPL 2022 Double Header
author img

By

Published : Apr 30, 2022, 2:41 PM IST

மும்பை: 15ஆவது ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி தொடங்கிய நிலையில், தொடர்ந்து மகாராஷ்டிராவில் உள்ள நான்கு மைதானங்களில் நடைபெற்று வருகின்றது. லீக் சுற்றுப்போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வார இறுதி நாள்கள் என்பதால் இன்று (ஏப். 30) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

மாலை போட்டி: முதல் போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணி, டூ பிளேசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சந்திக்கின்றன. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்றாலும், குஜராத் விளையாடிய 8இல், ஒரு போட்டியில் மட்டும் தோற்று முதலிடத்தில் உள்ளது.

தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த ஆர்சிபி அணிக்கு கடந்த இரண்டு போட்டிகள் (ஹைதராபாத், ராஜஸ்தான்) மிக மோசமானதாக அமைந்தது. அந்த அணி 10 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் இருந்தாலும் பேட்டிங், பௌலிங் ஆகியவை 'டல்' அடிக்கிறது. விராட், டூ பிளேசிஸ், மேக்ஸ்வேல், தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமது ஆகியோர் நிச்சயம் இன்றைய தினம் சோபித்தே ஆக வேண்டும்.

ஒரு போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிவிட்டால், பந்துவீச்சு தாக்குதல் மூலம் வெற்றிபெறுவதும், பந்துவீச்சாளர்கள் போக்குகாட்டிவிட்டால் பேட்டர்கள் கைகொடுப்பது என குஜராத் அணிக்கு முதல் தொடரே மிகவும் அதிர்ஷ்டமானதாக அமைந்துவிட்டது. இவ்விரு அணிகள் மோதும் முதல் போட்டி என்பதால், இப்போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

குஜராத் டைட்டன்ஸ்: சுப்மான் கில், விருத்திமான் சாஹா, டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ராகுல் தெவாடியா, ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, யாஷ் தயாள் மற்றும் அல்சாரி ஜோசப்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ராஜத் பட்டீதர், கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்சல் படேல், வனிந்து ஹசரங்க டி சில்வா, ஜோஷ்ஹம் ஹசில்வூட்.

இரவு போட்டி: இன்றைய தினத்தின் மற்றொரு போட்டி, நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் விளையாடி 6இல் வெற்றி, 2இல் தோல்வி என 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி இடத்திலும் உள்ளன.

குறிப்பாக, இன்றைய போட்டியிலும் மும்பை தோற்கும்பட்சத்தில் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து அதிகமுறை தோற்ற அணிகளின் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும். இதற்கு முன்னர் கொல்கத்தா, டெல்லி, புனே வாரியர்ஸ் ஆகிய அணிகள் 9 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன்(கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், முருகன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, ரிலே மெரிடித்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், கருண் நாயர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், ஓபேட் மெக்காய், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.

இதையும் படிங்க: PBKS vs LSG: குர்னால் அபாரம்; பஞ்சாபை கட்டுப்படுத்திய லக்னோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.