ETV Bharat / sports

IPL 2021 SRH vs RCB: சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி! - ஐபிஎல் 2021 ராயல் சேலஞ்சர்ஸ்

ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

IPL 2021 SRH vs RCB  SRH vs RCB  SRH vs RCB Match Report  RCB Won  SRH vs RCB Match Review  ஐபிஎல் 2021 SRH vs RCB  ஐபிஎல் 2021 ராயல் சேலஞ்சர்ஸ்  ஐபிஎல் 2021 ராயல் சேலஞ்சர்ஸ் vs சன் ரைசர்ஸ்
SRH vs RCB Match Report
author img

By

Published : Apr 15, 2021, 12:33 AM IST

ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 13 பந்துகளில் 11 ரன்களிலும், ஷபாஸ் அகமது 10 பந்துகளில் 14 ரன்களிலும் ஆட்டமிந்தனர். அணியின் தூண்களான விராட் கோலி 29 பந்துகளில் 33 ரன்னிலும், டிவில்லியர்ஸ் 5 பந்துகளில் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

கடைசிநேரத்தில் அணியின் நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல் சற்று அதிரடி காட்டியதால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 47 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார்.

ஹைதராபாத் அணி தரப்பில் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஷித் கான் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்கார்களாக விருத்திமான் சஹா, கேப்டன் டேவிட் வார்னர் களமிறங்கினர்.

9 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்திருந்த சஹா சிராஜ் பந்துவீச்சில் வெளியேறினார். இரண்டாவதாக களமிறங்கிய மனீஷ் பாண்டே கேப்டன் டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த டேவிட் வார்னர் 37 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட 54 ரன்கள் எடுத்து ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிந்தார்.

மூன்றாவதாக களமிறங்கிய பேர்ஸ்டோவ் 12 ரன்னிலும், 39 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்த மனீஷ் பாண்டே, ஷபாஸ் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

IPL 2021 SRH vs RCB  SRH vs RCB  SRH vs RCB Match Report  RCB Won  SRH vs RCB Match Review  ஐபிஎல் 2021 SRH vs RCB  ஐபிஎல் 2021 ராயல் சேலஞ்சர்ஸ்  ஐபிஎல் 2021 ராயல் சேலஞ்சர்ஸ் vs சன் ரைசர்ஸ்
6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி

இதனால், ஹைதராபாத் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றது. பெங்களூரு அணிதரப்பில் ஷபாஸ் அகமது அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய பெங்களூரு அணியின் வீரர் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இதையும் படிங்க: IPL 2021 SRH vs RCB: பெங்களூரு தடுமாற்றம்; மேக்ஸ்வெல் அரை சதத்தால் 149 ரன்கள் குவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.