ETV Bharat / sports

IPL 2021: புள்ளிப்பட்டியலில் முன்னேறிய சிஎஸ்கே

author img

By

Published : Apr 17, 2021, 6:37 AM IST

பவுலிங்கில் தீபக் சஹார், பேட்டிங்கில் மொயின் அலி என ஆதிக்கம் செலுத்தி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான எளிதான வெற்றியுடன் ஐபிஎல் 2021 தொடரில் தனது அக்கவுண்டை தொடங்கியுள்ளது.

Moeen, Faf power CSK to 6-wicket win against Punjab Kings
புள்ளிப்பட்டியலில் விர்ரென முன்னேறிய சிஎஸ்கே

மும்பை: ஐபிஎல் 2021 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியைப் பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 107 ரன் என்ற எளிய இலக்கை 15.4 ஓவரில் விரட்டி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

முன்னதாக, சிஎஸ்கே பவுலர்களின் அசத்தலான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணியில் புதுமுக வீரரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாருக்கான் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். சிறப்பாகப் பந்து வீசிய சிஎஸ்கே வீரர் தீபக் சஹார் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய சிஎஸ்கே தொடக்க பேட்ஸ்மேனான ரிதுராஜ் கேக்வாட் ரன்களைக் குவிப்பதில் திணறினார். 16 பந்துகளை எதிர்கொண்டு ஐந்து ரன்களை மட்டும் எடுத்து அர்ஷ்தீப் சிங் வீசிய ஷாட் பந்தில் தீபக் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இதன் பின்னர் களமிறங்கிய மொயின் அலி தொடக்கம் முதல் ரன் குவிப்பில் ஈடுபடத் தொடங்கினார். இவருடன் மற்றொரு தொடக்க பேட்ஸ்மேனான டூ பிளெசிஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அணியின் ஸ்கோர் 90 என இருந்தபோது 46 ரன்கள் எடுத்திருந்த மொயின் அலி முருகன் அஸ்வின் சூழலில் ஷாருக்கானிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

இதற்கு அடுத்து களமிறங்கிய ரெய்னா 8, ராயுடு 0 என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இருப்பினும் 10 ரன்களுக்கு குறைவாகவே வெற்றிக்கான இலக்கு இருந்த நிலையில், அடுத்து வந்த சாம் குர்ரான் பவுண்டரியுடன் இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் முதல் வெற்றியை ருசிக்கவைத்தார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டூ பிளெசிஸ் 36 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

15.4 ஓவரில் வெற்றிக்கான இலக்கை எட்டிய நிலையில், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சிஎஸ்கே தற்போது இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதையும் படிங்க: பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பை இடைநீக்கம் செய்த ஃபிஃபா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.