ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் நேற்று முன்தினம் (ஏப்.9) சென்னையில் பார்வையாளர்களின்றி தொடங்கியது.
சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 19 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா 12 போட்டிகளிலும், ஹைதராபாத் 7 போட்டிகளிலும் வென்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர் (கேப்டன்), விருத்திமான் சஹா, ஜானி பேர்ஸ்டோவ், மணிஷ் பாண்டே, விஜய் சங்கர், முகமது நபி, புவனேஷ்வர் குமார், டி நடராஜன், சந்தீப் சர்மா, ரஷீத் கான், அப்துல் சமத்,
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: இயான் மோர்கன் (கேப்டன்), சுப்மேன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி,ஷாகிப் அல் ஹசான், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்கரவர்த்தி, ஹர்பஜன் சிங், பிரசித் கிருஷ்ணா, பாட் கம்மின்ஸ்