அகமதாபாத்: 14ஆவது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி ரசிகர்களின்றி சென்னையில் தொடங்கியது. இதுவரை சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், மும்பை வான்கடே மைதானத்திலும் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து லீக் ஆட்டங்களும் நிறைவடைந்துவிட்டன. வரும் போட்டிகள் அனைத்தும் அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.
இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு அணியும், டெல்லி அணியும் விளையாடுகிறது. டெல்லி அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் வென்று, பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தவான், பிருத்வி ஷா இருவரின் தொடக்கம், டெல்லி அணி பெரிய இலக்குகளை எளிதாக எட்ட முதன்மையாக இருக்கிறது. அதனால் தான் சென்னை அணிக்கு எதிராக 189 ரன்கள், பஞ்சாப் அணிக்கு எதிராக 196 ரன்கள் என இமாலய இலக்குகளைக் கூட டெல்லி அணியால் எளிதாக வெல்ல முடிந்தது.
-
📹 | We just need 51 seconds of your time to get you pumped up for #DCvRCB 🔥#YehHaiNayiDilli #IPL2021 #CapitalsUnplugged @OctaFX pic.twitter.com/wtqgmc8QNg
— Delhi Capitals (Stay Home. Wear Double Masks😷) (@DelhiCapitals) April 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">📹 | We just need 51 seconds of your time to get you pumped up for #DCvRCB 🔥#YehHaiNayiDilli #IPL2021 #CapitalsUnplugged @OctaFX pic.twitter.com/wtqgmc8QNg
— Delhi Capitals (Stay Home. Wear Double Masks😷) (@DelhiCapitals) April 27, 2021📹 | We just need 51 seconds of your time to get you pumped up for #DCvRCB 🔥#YehHaiNayiDilli #IPL2021 #CapitalsUnplugged @OctaFX pic.twitter.com/wtqgmc8QNg
— Delhi Capitals (Stay Home. Wear Double Masks😷) (@DelhiCapitals) April 27, 2021
மிடில் ஆர்டரை பார்த்தோமானால் ஸ்டிவ் ஸ்மித், ரிஷப் பந்த் இருவர் மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஹெட்மயர், ஸ்டோய்னிஸ் இருவரும் செட்டில் ஆகி விளையாடினால் டெல்லி கூடுதல் பலம் பெரும். பந்துவீச்சிலும் ரபாடா, ஆவேஷ் கான் ஜோடி கலக்கி வருகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் தொடரிலிருந்து விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக இந்திய வீரர் உமேஷ் யாதவ் அல்லது தென்னாப்பிரிக்கா வீரர் ஆன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் இன்றைய பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே வெல்ல முடியாத அணியாக வலம் வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கடந்த போட்டியில் சென்னை அணியிடம் பொட்டிப் பாம்பாக அடங்கியது. ஆறாவது இடத்தில் இறங்கி நிலையாக விளையாடக் கூடிய வீரர்கள் யாரும் இல்லாமல் பெங்களூரு அணி தவித்து வருகிறது. டான் கிறிஸ்டியன், ஜேமிசன், ஷபாஸ் அகமது என யாரை பயன்படுத்துவது என்ற குழப்பம் நீடித்து வருவதால், போட்டிக்கு ஒருவரை மாற்றிக்கொண்டே வருகிறது.
-
Smiles that brighten our day. 🤩😇#PlayBold #WeAreChallengers #IPL2021 pic.twitter.com/nNyG1zY659
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Smiles that brighten our day. 🤩😇#PlayBold #WeAreChallengers #IPL2021 pic.twitter.com/nNyG1zY659
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 27, 2021Smiles that brighten our day. 🤩😇#PlayBold #WeAreChallengers #IPL2021 pic.twitter.com/nNyG1zY659
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 27, 2021
கடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் 37 ரன்களை விட்டுக் கொடுத்த ஹர்ஷல் பட்டேல் தான் இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போட்டியில் அவர் வீசிய முதல் மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் வீழத்தி 14 ரன்களே விட்டுக்கொடுத்திருந்தார். ஆதலால், இன்றைய போட்டியில் அவரின் மேல் கூடுதல் அழுத்தம் இருந்தாலும், அவரின் துல்லியமாக யார்க்கர்கள் தொடர்ந்து எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கடந்த 2020 ஐபிஎல் தொடரின், இவ்விரு அணிகள் மோதிய இரண்டு லீக் போட்டியிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியே வென்றது. அதேபோல் பிளே-ஆஃப் எலிமினேட்டரிலும் டெல்லியிடம் உதை வாங்கியே பெங்களூரு அணி தொடரிலிருந்து வெளியேறியது. இன்றைய போட்டியில் தனது கடந்தகால தோல்விக்கு ஆர்சிபி பதிலளிக்குமா அல்லது டெல்லி தனது ஆர்சிபி மீதான ஆதிக்கத்தை தொடருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதுவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் 25 போட்டிகளில் மோதி, 15 போட்டிகளில் பெங்களூரு அணியும், 10 போட்டிகளில் டெல்லி அணியும் வென்றுள்ளன.
புள்ளிப்பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளதால் இன்றைய போட்டியை வென்று, முதல் இடத்தை ஆக்கிரமிக்க இரண்டு அணிகளும் வெறியோடு விளையாடும் என்பதில் மாற்றுக் கருத்துமில்லை.
இதையும் படிங்க: எல்லையை மூடுகிறதா ஆஸி? கிரிக்கெட் வீரர்களைத் திரும்ப அழைத்துவர ஆலோசனை