அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 21ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.
அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்கவீரர்களாக கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். பொறுமையாக ஆடி வந்த ராகுல், பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் 19(20) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் கிறிஸ் கெயில் ரன் ஏதும் எடுக்காமலும், தீபக் ஹூடா 1(4) ரன்னிலும் வெளியேறினார்கள்.
மறுமுனையில், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயாங்க் அகர்வால் 31(34) ரன்களிலும், ஹென்ரிக்ஸ் 2(3) ரன்களிலும் நரைன் சுழலில் வீழ்ந்தனர். இந்த தொடரில் தொடர்ந்து சோபிக்காமல் இருந்த பூரன், இப்போட்டியில் 19(19) ரன்களில் வருணிடம் தனது விக்கெட்டை இழந்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாருக் கான் பஞ்சாப் அணியை கரை சேர்ப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் 13(14) ரன்கள் எடுத்தபோது பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் மோர்கனிடம் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து ரவி பீஷ்னோய் 1(4) ரன்னில் ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி 98 ரன்களில் 8 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
-
Innings Break: @CJordan 30 (18) provides the much-needed push as #PBKS score 123-9 in 20 overs.
— IndianPremierLeague (@IPL) April 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
It has been a disciplined bowling performance from #KKR👏🏾@prasidh43 takes 3/30
🔗https://t.co/sBoaBIpF2J #PBKSvKKR #VIVOIPL pic.twitter.com/PihUxGbuDJ
">Innings Break: @CJordan 30 (18) provides the much-needed push as #PBKS score 123-9 in 20 overs.
— IndianPremierLeague (@IPL) April 26, 2021
It has been a disciplined bowling performance from #KKR👏🏾@prasidh43 takes 3/30
🔗https://t.co/sBoaBIpF2J #PBKSvKKR #VIVOIPL pic.twitter.com/PihUxGbuDJInnings Break: @CJordan 30 (18) provides the much-needed push as #PBKS score 123-9 in 20 overs.
— IndianPremierLeague (@IPL) April 26, 2021
It has been a disciplined bowling performance from #KKR👏🏾@prasidh43 takes 3/30
🔗https://t.co/sBoaBIpF2J #PBKSvKKR #VIVOIPL pic.twitter.com/PihUxGbuDJ
கடைசி நேரத்தில், கிறிஸ் ஜோர்டன் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 18 பந்துகளில் 30 ரன்களை குவித்து ஆறுதல் அளித்தார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 123 ரன்களை எடுத்தது.
-
Let's give it our all 💪🏻#SaddaPunjab #IPL2021 #PunjabKings #PBKSvKKR pic.twitter.com/vfDq31gl1d
— Punjab Kings (@PunjabKingsIPL) April 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Let's give it our all 💪🏻#SaddaPunjab #IPL2021 #PunjabKings #PBKSvKKR pic.twitter.com/vfDq31gl1d
— Punjab Kings (@PunjabKingsIPL) April 26, 2021Let's give it our all 💪🏻#SaddaPunjab #IPL2021 #PunjabKings #PBKSvKKR pic.twitter.com/vfDq31gl1d
— Punjab Kings (@PunjabKingsIPL) April 26, 2021
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ், சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.