மும்பை: ஐபிஎல் தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி கொல்கத்தா தொடக்க வீரர்களாக கில், ராணா ஆகியோர் களமிறங்கினர். கில் 11(19) ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, ராணா 22(25) ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இறங்கிய சுனில் நரைன் 6(7) ரன்களிலும், மோர்கன் ஒரு பந்தினைக் கூட சந்திக்காமல் ரன் அவுட்டாகியும் பெவிலியன் திரும்பினர்.
-
Bowling brilliance. 🔥
— Rajasthan Royals (@rajasthanroyals) April 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Let's chase this down. 👊#HallaBol | #RoyalsFamily | #RRvKKR pic.twitter.com/5ss5KKjchS
">Bowling brilliance. 🔥
— Rajasthan Royals (@rajasthanroyals) April 24, 2021
Let's chase this down. 👊#HallaBol | #RoyalsFamily | #RRvKKR pic.twitter.com/5ss5KKjchSBowling brilliance. 🔥
— Rajasthan Royals (@rajasthanroyals) April 24, 2021
Let's chase this down. 👊#HallaBol | #RoyalsFamily | #RRvKKR pic.twitter.com/5ss5KKjchS
மறுமுனையில் மிகப்பொறுமையாக விளையாடிவந்த திரிபாதி 36(26) ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் அதிரடி காட்டிய ரஸ்ஸல் 9(7) ரன்களிலும், சற்றுநேரம் தாக்கு பிடித்த தினேஷ் கார்த்திக் 25(24) ரன்களிலும் மோரிஸிடம் வீழ்ந்தனர்.
இறுதிக்கட்டத்தில் கம்மின்ஸ் 10(6) ரன்களிலும், சிவம் மவி 5(7) ரன்களிலும் மோரிஸிடமே விக்கெட்டை இழந்தனர்
இதன்மூலம் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்துள்ளது. ராஜஸ்தான் சார்பில் மோரிஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.