மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளில் பஞ்சாப், சென்னை, பெங்களூரு அணிகளுக்கு எதிராகத் தோல்வியைத் தழுவி கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. டெல்லி அணியோடு மட்டுமே மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வென்றது
தொடரின் ஆரம்பத்தில் இருந்தே ராஜஸ்தானின் தொடக்க வீரர்கள் திணறிவருகிறார்கள். பட்லர் ஓரளவுக்குச் சூழலைப் புரிந்து ஆடினாலும், மனன் வோராவோ மனம்போன போக்கில் விளையாடிவருகிறார். நான்கு போட்டிகளில் 12, 9, 14, 7 என வோரா 42 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இந்தத் தொடரில் பட்லர் - வோரா இணையின் அதிகபட்ச பாட்னர்ஷிப் 30 ரன்கள்தான்.
டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களில் ரன்களைக் குவிப்பதென்பது இன்றியமையாத ஒன்று என்னும்போது, இந்த இணை ரன்களைச் சேர்க்கத் தவறுகிறது.
ராஜஸ்தானின் பரிதாபகரமான நிலைக்கு இதுவே முதல் காரணம். மேலும், ராஜஸ்தானின் நிலையற்ற பேட்டிங் நடுவரிசையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கடந்த போட்டியில் ரியான் பராக், சிவம் தூபே, ராகுல் திவாத்தியா சற்று ஆறுதல் அளித்த நிலையில், இன்றையப் போட்டியிலும் அவர்களின் பங்களிப்பு மிக அவசியமாகிறது.
-
In this, together. Let's win this, together. 👊💗#HallaBol | #RRvKKR | #IPL2021 pic.twitter.com/jR5QnrDXTB
— Rajasthan Royals (@rajasthanroyals) April 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">In this, together. Let's win this, together. 👊💗#HallaBol | #RRvKKR | #IPL2021 pic.twitter.com/jR5QnrDXTB
— Rajasthan Royals (@rajasthanroyals) April 24, 2021In this, together. Let's win this, together. 👊💗#HallaBol | #RRvKKR | #IPL2021 pic.twitter.com/jR5QnrDXTB
— Rajasthan Royals (@rajasthanroyals) April 24, 2021
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு விக்கெட்டைக்கூட ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் கைப்பற்றவில்லை. இருப்பினும், சில தவறுகளைத் தவிர்க்கும்பட்சத்தில் ராஜஸ்தான் பவுலர்கள் கொல்கத்தா பேட்ஸ்மேன்களைத் திணறடிக்க வாய்ப்புள்ளது. ஆல்ரவுண்டர் மோரிஸ் பந்துவீச்சிலும் தனது பங்களிப்பை அளித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
கேகேஆர் அணியோ சென்னைக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்றாலும் பயங்கரமான இன்னிங்ஸை ஆடி, தொடரில் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. கொல்கத்தா அணியில் பேட்டிங் பிரச்சினை என்பது முதல் வரிசை பேட்ஸ்மேன்கள்தான். கில், திரிபாதி, நரைன், மோர்கன் எனப் பெயரளவில் மட்டுமே பலமாகவுள்ளது.
அவர் தினேஷ் கார்த்திக் இன்றும் சிறப்பாக விளையாடும்பட்சத்தில், கொல்கத்தாவின் மிடில் ஆர்டர் வலுபெறும்.
-
Looking in good touch with #RRvKKR round the corner 🏏👌🏼
— KolkataKnightRiders (@KKRiders) April 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Who are you looking forward to the most?@RealShubmanGill @NitishRana_27 @DineshKarthik @tripathirahul52 @Russell12A @patcummins30 #KKRHaiTaiyaar #IPL2021 pic.twitter.com/2IxJQxy5kx
">Looking in good touch with #RRvKKR round the corner 🏏👌🏼
— KolkataKnightRiders (@KKRiders) April 24, 2021
Who are you looking forward to the most?@RealShubmanGill @NitishRana_27 @DineshKarthik @tripathirahul52 @Russell12A @patcummins30 #KKRHaiTaiyaar #IPL2021 pic.twitter.com/2IxJQxy5kxLooking in good touch with #RRvKKR round the corner 🏏👌🏼
— KolkataKnightRiders (@KKRiders) April 24, 2021
Who are you looking forward to the most?@RealShubmanGill @NitishRana_27 @DineshKarthik @tripathirahul52 @Russell12A @patcummins30 #KKRHaiTaiyaar #IPL2021 pic.twitter.com/2IxJQxy5kx
ரஸ்ஸலின் எழுச்சி கொல்கத்தா அணிக்கு அசுர பலத்தை அளிக்கும் என்றாலும், கொல்கத்தா பந்துவீச்சாளர்களும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசியாக வேண்டும். சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பவுலிங்கிலும் அரைசதம் எடுத்து, பேட்டிங்கிலும் அரைசதம் கடந்த பாட் கம்மின்ஸ் இன்று பேட்டிங்கில் மட்டும் அரைசத்தை முயற்சிக்க வேண்டும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் புள்ளிப்பட்டியலில் முறையே ஏழாவது, எட்டாவது இடங்களில் உள்ளதால், இன்றையப் போட்டியின் இரண்டு புள்ளிகளைத் தனதாக்கிக் கொள்ள இரண்டு அணிகளும் தீவிரமாகப் போராடும்.
இதையும் படிங்க: மும்பை இந்தியன்ஸை சோதித்த பஞ்சாப் கிங்ஸ் - 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!